புதிய சிந்தனை --- தொகுப்பு ---------------------- Author மலரினும் மெல்லிய

வறுமையின் நிறம் கருப்பு


வாடியப் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன். என்று பாடிய வள்ளலார் இன்று இருந்திருந்தால் வறுமையில் வாடிய வயிறுகளைக்
கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடியிருப்பார். எங்கும் வறுமை எதிலும் வறுமை, தங்க இடமின்றி தவிக்கும் வறுமை, தாகத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் வறுமை,
பெறுவார் பேணி காப்பார். என்று பாடிய வள்ளுவன் வாய்மொழியே தவறாகி விட்டது.
வறுமையின் பிடியில் பெறுவார் வறுமையில் வாடுவார். காப்பாரற்று......
ஏன் என்று கேட்பாரற்று........
வாழ்க்கையில் வறுமை என்பது ஒரு பாகம். ஆனால் அதுவே பலரது வாழ்வில் தீராத சோகம். கருவில் சுமந்த ஏழைத்தாய், கதறி துடித்து தான் பெற்றெடுத்தப் பிள்ளையை வறுமைக்கு இரையாக்குகிறாள்
வாழப் பிறந்தவன் வாழ்கிறான்........
ஆளப் பிறந்தவன் ஆள்கிறான்........
ஆனால்......
ஏழ்மையின் பிடியில் வளர்ந்தவன் தன் வாழ்க்கையை வாழாமல் வறுமைக்கு
இழக்கிறான்....... வறுமையை ஒழிக்க தன்னம்பிக்கை வேண்டும். ஆனால் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தாலும் தட்டு நிறையாது....... உழைப்பைக் கொண்டு வறுமையை விரட்டலாம் என்றால்,
தன் உழைப்பை தாராளமாக பயன்படுத்தி...., தடம் மாற்றும் சுயநலவாதிகளின்......., எண்ணிக்கைக்கு அளவேயில்லை....... எனும்போது வறுமையை ஒழிக்க வாய்ப்பே இல்லை.
அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும்........ ஏழையின் வாயில் கதவில் அனுமதியின்றி நுழையும் வறுமையின் நிறம் கருப்பு..........
அந்த கருப்பு கள்வனைக் கொல்ல ஏழைக்கு தேவையான ஆயுதம் தான் பணம்.......
ஆனால் அந்த ஆயுதத்தைப் பெற அவனது ஆயுட்காலம் போதாது........, அப்படி இருக்கும்
பொழுது ஏழையை விட்டு பிரியாது ஏழ்மை........
ஏழையின் கனவில் வரும் பனி மாளிகை......, காலைக் கதிரவனைக் கண்டால் காணாமல் போகும்.......
வாழ்க்கையை வானவில் வண்ணங்களாக நினைத்தால் சில மணித்துளிகளில் மறைந்து போகும்........ ஆகவே......., கனவாக மாற்ற நினைத்தாலும்........, நினைவாக மாற்ற நினைத்தாலும்.....,
அவனுடைய ஏமாற்றம் அழிந்து போகாமல் நிலைத்து நிற்கும்........
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்........
ஏழையின் அழுகையில் வறுமை..., சோகம்..., ஏழ்மை..., இல்லாமை..., ஏக்கம்..., துக்கம்...,வலி..., துயரம்..., வேதனை....,பசிக்கொடுமை....,போன்ற அனைத்தையும் காணலாம்......
வரியவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தது வறுமையின் குற்றம்......... அந்த
குற்றத்தை தடுக்க வேண்டும் புதியதோர் சட்டம்........பிறர் பசியை போக்கி.......,
தம் பசியை பிறகு தீர்க்கும்......, மானிடர்கள் இவ்வுலகில் மிகக்குறைவு........
தாயின் வயிற்றில் கருமைநீற கருவறையில் விடியலை நோக்கி இருந்த நாம் வெளியே வந்தும் கருமைநீற வறுமையில் வாடுகின்றோம்.......
குடிசைகள் கோபுரங்களாவது எப்பொழுது........
சுமைகள் சுகங்களாவது எப்பொழுது.......
துன்பம் மகிழ்ச்சிகளாவது எப்பொழுது........
வறுமை வசந்தமாவது எப்பொழுது........
ஏழ்மையில்லாத நிம்மதியான வாழ்க்கையை கேட்டுப் பெறுவதற்குள்
இறப்பு வந்துவிடும் இப்பொழுது........
தர்மம் தலைகாக்கும்......., தனக்கே இல்லாமல் இருக்கும் பொழுது....,
தர்மம் செய்வது எப்படி.......
தரணியில் வாழ்வது எப்படி........
மனித இனத்தை தழைக்கச் செய்வது எப்படி.......
பறவையாக பிறந்திருந்தால் சிதறிய தானியங்களை உண்டு வாழ்ந்திருக்கலாம்....
விலங்காக பிறந்திருந்தால் இழை தழைகளை உண்டு வாழ்ந்திருக்கலாம்.....
மனிதனாக பிறந்து.......
ஏழ்மையில் வாழ்ந்து......
வறுமையின் வலையில் வீழ்ந்து.....
வாடுகின்றோம்........
இத்தகைய கொடுமையை அனுபவிப்பதற்கு பதிலாக........
பிறக்கும் பொழுதே இறந்திருக்கலாம்...
தாயின் கருவிலே கரைந்திருக்கலாம்.....
இருள் சூழ்ந்த இருட்டினை விரட்ட உதயமாகும் விடியல்......
அதுபோல்.....
இருள் சூழ்ந்த ஏழையின் வறுமையை விரட்ட உதயமாகும் விடியல் எப்பொழுது
கிடைக்கும்........
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்........
அது போல்.......
ஏழையின் கண்ணீரை துடைக்க தவறிவன் இறைவனின் எதிரி ஆவான்.....
இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை தடை செய்யும் செயலை செய்பவன் ஆவான்.......
நேர்மையை விரும்பாதவன் ஆவான்.......
உழைக்க தெரியாதவன் ஆவான்.....
உண்மையை வெறுப்பவன் ஆவான்....
பொய்மையில் வாழ்பவன் ஆவான்.....
கொடும்பாவங்கள் செய்யும் அளவுக்கு சமமானவன் ஆவான்.....
குளத்தில் நிரம்பியிருக்கும நீரானது...... சுட்டெரிக்கும் அக்னிவெயிலில் வற்றிப் போகும்.......
அதுபோல்.......
சுட்டெரிக்கும் வெயிலில் ஏழையின் உழைப்பு நிரம்பியிருந்தாலும்..... வறுமையில்
அவனது வயிறு வற்றி போயிருக்கும்.......
போதுமான உணவு இல்லாமலும்......
மிகையான எதிர்பார்ப்பு இல்லாமலும்.....
வெறுமையாய் கிடக்கும்.......
ஆகாயத்தில் இருக்கும் நிலவின் வெளிச்சத்தை இரவு ஏற்க மறுத்து
மூடி மறைத்தாலும்......., வெளிச்சம் பூமியில் பரவும்.....
அதுபோல்........
ஏழையின் ஆழ்மனதில் எழும் ஆசைகளையும்....., ஏக்கங்களையும்......,
உள்ளம் ஏற்க மறுத்து மூடி மறைத்தாலும்....., ஏழையின் கண்ணீர் துளிகள் காட்டிக் கொடுக்கும்......
இல்லாமையை நினைத்து.......
தன்னுடைய இயலாமையை நினைத்து......
வாழ்வை வெறுக்கும்......
வண்ணங்கள் நிறைந்தது தான் ஏழையின் வாழ்க்கை......
செம்மை நிறத்தில் ஒரு சோகம்.......
வெண்மை நிறத்தில் ஒரு வேதனை.......
பசுமை நிறத்தில் ஒரு பசிக்கொடுமை........
கருமை நிறத்தில் ஒரு வறுமை.......
மஞ்சள் நிறத்தில் ஒரு மகிழ்ச்சி...... கிடைக்காத என்ற ஏக்கத்தோடு வாழும் ஏழையின் கண்ணீருக்கு நிறமே இல்லை......
ஆகையால்......
துன்பங்கள் நிறைந்தது தான் ஏழையின் வாழ்க்கை என்றால் சரியாக இருக்கும்........
ஏழை பயிரிடச் சென்றால் வெள்ளம் பெருகும்.....
ஏழை களை பறிக்க சென்றால் எரிமலை வெடிக்கும்......
திறமையிருந்தும் தோற்றுப் போகிறான்........
உழைப்புயிருந்தும் ஊதியம் கிடைப்பதில்லை........
அதிர்ஷ்டம் கூட அவனை எட்டி பார்ப்பதில்லை.......
உயிர் வாழ்வதற்கு காற்று மிக அவசியம்........ அதுபோல்
ஏழை வாழ்வதற்கு உயர்வு மிக அவசியம்.
உயர்வை பெற ஏழை சிந்தும் வியர்வை துளிகள் மண்ணில்
விழுவதற்குமுன் மறைந்து விடுகிறது......
காணல் நீர் போல் கரைந்து விடுகிறது......
காட்டில் தம் பசிக்காக மற்ற விலங்குகளை......., வேட்டையாடி
உண்ணும் விலங்குகளுக்கும்...., பிறர் உழைப்பை வேட்டையாடி உண்ணும்
மனிதர்களுக்கும் வேற்றுமை ஒன்றுமில்லை.......
ஏழையின் வாழ்க்கைப் பாதையில் கற்களும்..., முட்களும் நிறைந்திருக்கும் பொழுது....., பணம் என்னும் ஒரு பயணம் வேறு திசை நோக்கி போய்விடுகிறது...
ஏழ்மையின் மணம் வீசும் பூந்தோட்டம் தான் ஏழையின் இல்லம்....
அந்த பூந்தோட்டத்தில் வறுமை என்னும் மலர்கள் மலர்ந்து வாடுகின்றன...
வாடாத காகித மலர்களாய்........, ஏழையின் முன்னேற்றத்தை முடக்கும்
வசதி படைத்தவர்கள் இரருக்கும் வரையில் வறுமை மலர்கள் உதிர்வது உறுதி....
ஏழையின் வாழ்நாளில் பாதி நாட்கள் முழுமைப் பெறுவதில்லை...
ஏழையின் மனதில் எழும் ஏக்கங்களையும்......., துன்பங்களையும்......, சுமந்து...
நிறைவேறாத ஆசைகளுடன் வாழ்க்கையை வாழ்கிறான்......


அன்புடன்
உங்கள் தோழி...
உசா...
---------------------------













புனிதமான காதல்


Author: மலரினும் மெல்லிய....! |

சிறகுகள் இருந்தால் தான் பறக்க முடியுமா.........?

கருமேகங்கள் தெரிந்தால் தான் மழை பொழியுமா..........?

மொட்டுகள் விரிந்தால் தான் பூக்கள் மலருமா.........?

நாட்கள் அதிகரித்தால் தான் வருடம் கழியுமா.........?

வறுமை வந்தால் தான் உழைப்பு பெறுகுமா........?

காதல் வந்தால் தான் கவிதை தோன்றுமா.........?

நான் இறந்தால் தான் என் காதல் புரியுமா........?

புரியாது உனக்கு.........

எடுத்துக் கொள்.........

என் உயிரையும்.........

உயிரினும் மேலான.........

என் காதலையும்.......

-----------------------
அளவில்லை

விண்ணில் மிளிரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை..........
கடலில் துள்ளும் மீன்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை...........
பூமியில் மலரும் பூக்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை...........
உனை நினைக்கும் நொடிகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை..........
ஆனால்.........
நீ எனை நினைக்காது பிரிந்ததும் எண்ணிக்கை முடிந்தது...........
என் மனதின் எண்ணிக்கை ஒன்று தான்........
என் இதயத்தின் எண்ணிக்கை ஒன்று தான்........
என் உயிரின் எண்ணிக்கை ஒன்று தான்........
உனை எண்ணி எண்ணி.........
சென்றேன் மரண வாசலுக்கு..
-------------------------

விழிப்புணர்வு

பொண்வீணை எடுத்தேன்......... அதை இசையாக்க மறந்தேன்........
வானவில் ரசித்தேன்........ அதை வண்ணமாக்க மறந்தேன்........
விதையை விதைத்தேன்....... அதை பயிராக்க மறந்தேன்........
காற்றை சுவாசித்தேன்........ அதை தூய்மையாக்க மறந்தேன்.......
மழையில் நனைந்தேன்......... அதை சேமிக்க மறந்தேன்........
இயற்கையை நேசித்தேன்........ அதை பாதுகாக்க மறந்தேன்.......
அதன் விளைவு பூமி வெப்ப மயமாய் மாறியது.............
நானும் மாறினேன்.........
பாதம் கொண்டு பயணம் செய்தேன்........, வாகனத்தை மறந்தேன்........
நிலவொளியை கண்டு வெளிச்சம் பார்த்தேன்........, மின்சாரத்தை மறந்தேன்........
விதைகளை விதைத்து வளம் பெற்றேன்.........,வறட்சியை மறந்தேன்........
உயிரினங்களை மறையாமல் இருக்க செய்ய........
மறக்காமல்........
உதவுவேன் என் இயற்கை அன்னைக்கு........
--------------------------
உருவானது

பூக்கள் மலர மறுத்தால் பூஞ்சோலை உருவாகாது........?
சூரியன் உதிக்க மறுத்தால் விடியல் உருவாகாது........?
மழைதுளி பொழிய மறுத்தால் செழுமை உருவாகாது..........?
வெண்மதி வெளிச்சம் தர மறுத்தால் பௌர்ணமி உருவாகாது.........?
இயற்கை அன்னை உலகிற்கு மறுக்காமல்........
வந்ததால் பல மாற்றங்கள்......
உருவானது........
----------------------------------
ஏக்கம்

கனவில் வந்தது நானாக இருந்தால்....!
நீ தூங்கும் பொழுது காவல் இருப்பேன்.......
கவிதை தந்தது நானாக இருந்தால்....!
நீ படிக்கும் பொழுது விழியாய் இருப்பேன்......
கருவில் சுமந்தது நானாக இருந்தால்.....!
நீ பிறக்கும் பொழுது ஆவலாய் இருப்பேன்......
உனைக் காண.......,
விழி நீர் வழிய.......

எழுதியவர் : (24-Oct-16, 4:19 am)
பார்வை : 346

மேலே