பந்தின் பரிதாபம்

ஒரு உருவகக் கதை

அது ஒரு பெரிய விiயாட்டு மைதானம். ஒரு காலத்தில் எனக்குத் தொழிலத் தேடி தந்த இடம் என்பதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. நான் ஒரு விளையாட்டு வீரன். விளையாடுவது எனக்கு சிறு வயது முதற்கொண்டே இருந்து வந்த பிடித்தமான செயல். அது தான் நான் விரும்பிய பொழுதுபோக்கு. படிப்பில் நான் கவனம் செலுத்தாது காலபந்து, கிரிக்கட், வொலிபோல், டெனிஸ், பில்லியர்ட்ஸ் போன்ற பலவகை விளையாட்டுகளை விளையாடும் சந்தர்ப்பங்கள், என்னைத் தேடி வந்தன. ஆனால் புட்போலும், கிரிக்கட்டுமே எனக்குப பிரியமான விளையாட்டுகள்.

என் விளையாட்டுத் திறமையைக் கண்டு போலீஸ் சேவைக்கு சப் இன்ஸ்பெக்டராக. தேர்ந்தெடுத்தார்கள் பொலீஸ் இலாக்காவில் விiளாட்டுப் பகுதியில் பயிற்சியாளராக என்னை நியமித்தார்கள். இந்த விளையாட்டுகளில் முக்கிய பொருளான பந்துக்கும் எனக்கும் ஏதோ உறவு இருந்து கொண்டு வந்ததை என் நண்பன் சொன்ன போது தான் அதை உணர்ந்தேன்.

நான் பொலீஸ்சேவையில் இருந்து இளப்பாறிய பின்னர் பந்துக்கும் எனக்கும் இடையேலான உறவு அற்றுப்போகும் என நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. எனது இரசிகராக இருந்த ஒரு பிஸ்னஸ்மன் அழைப்பில், கோலப் விளையாட வெண்டிய சந்தர்ப்பம் என்னைத் தானாகவே தேடி வந்தது. எனது இரசிகரான ஒரு பிஸ்னஸ்மன் நான் ஒரு விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பதைக்கண்டு தன்னோடு கோல்ப விளையாட அழைத்தார். அவருடைடய அழைப்புக்கு என்னால் மறுப்பு தேறிவிக்க முடியவில்லை.

நான் கோhல்ப் விளையாடுவதைக் கண்ட அந்த பிஸ்னஸ்மானுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ நீர் இதற்கு முன்பு கோல்ப விளையாடியிருக்குறீரா”? அவர் என்னைக் கேட்டார்.

“நான் பொலீஸ் சேவையில் இருந்து ரிட்டயராக முன் கோலப் விளையாட வில்லை சார். ஆனால் பந்தோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அதுவே எனக்குத் தொழில் வாய்ப்பையும் கொடுத்தது” என்றேன்.

“என்ன நீர சொல்லுகிறீர்” அவர் புரியாமல என்னைக் கேட்டார்.

“நான் எப்படி புட்போல், கிரிகெட், வொலிபோல், டென்னிசில் ஒரு திறமையாள விளையாட்டு வீரனாக இருந்தேன் என்று அவருக்கு விளக்கியபோது தான் அவருக்கு நான் சொன்னது புரிந்தது,

*******

அன்று சனிக்கிழமை. நான் இளமைகாலத்தில விளையாடிய மைதானத்தைப பார்க்கச் சென்றேன். அந்த மைதானத்தில் விiயாட்டு போட்டி என்றால் கூட்டத்துக்கு குறைவில்லை. ஆனால் அன்று மைதானம் வெறுமையாக இருந்தது. மனிதர்கள் இல்லாத அந்த அமைதியான சூழலில் சில புறாக்களை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது,

தனிமையான அந்த இடத்தில் ஒரு வெள்ளை கறுப்பு நிறம் கலந்த கால் பந்து ஒன்று யாரும் கவனிப்பார் அற்று கால்பந்து கோல் அருகே கிடந்தது. எனக்கு அதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அது போன்ற எத்தனை பந்துக்களை நான் பார்த்திருப்பேன். உதைத்திருப்பேன். நான் சரியாக குறிவைத்து கோலுக்குள் பந்தை உதைத்து கைதட்டலைப் பெற்றிருக்கிறேன். அதை என்னால் மறக்கமுடியவில்லை. தனிமையாக இருக்கும் பந்தோடு பேசிப் பார்ப்போமே என்று அதை அணுகி என் பேச்சை ஆரம்பித்தேன்.

“எப்படியிருக்கிறாய் பந்து? உன் சொந்தக்காரர் உன்னை நிராகதியாக விட்டு விட்டு; போய்விட்டார்களா? அப்படி என்ன உனக்கு நடந்தது”?

“அதேன் ஐயா கேட்கிறியள். என்னை பாவித்த புட்போல் டீமுக்கு நான் நல்ல அதிர்ஸ்டத்தைக் கொடுக்கவில்லையாம். கடைசியில் நடந்த போட்டியில் அந்த டீம் கெப்டனின் உதைக்கு மதிப்புகொடுக்காமல் கோலுக்குள்; நான் போகாததால் ஒரு கோலால் டீம் தோற்றுவிட்டதம். நான என்ன செய்ய? அவர் சரியாக குறி வைத்து கோலுக்குள் அடிக்காததால் கோல் போஸ்ட்டில் நான்பட்டு கோலுக்குள் போகாததே காரணம்.

“இப்போ விளங்கிறது உனக்கு ஏன் இக்கதி என்று. நல்ல இடத்தில் இருந்தால் மட்டுமே மதிப்பு. நீ சரிவர அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடக்காததால் உன்னை நிராகரித்து விட்டார்கள்”.

“அதுமட்டுமல்ல எனக்கு இன்னாரு கவலை. என்னோடு டீமுக்குள் வந்த என் சினேகிதன் டீமின் அபிமானத்தைப் பெற்;றுவிட்டான்”:
“எப்படி அவன் பெற்றான்”?

“அவன் அவர்கள் சொன்னபடி உதைவாங்கி ஒரு தடவையாவது கோலுக்குள் போகத் தவறவில்லை. அதனால் பல போட்டிகளில் டீமுக்கு வெற்றியை கிடைத்திருக்கிறது.”

“ஓகோ அப்படியா?. இதுதான் அப்பா அரசியலிலும் நடக்கிறது. நான் ஒரு காலபந்தாட்ட வீரன் மட்டுமல்ல கிரிக்கட், வொலிபோல், டென்னிஸ்;; விiளாயடும் போது உன் சாதி ஆட்களோடு எனக்குத் தொடர்பு இருந்தது:

“எங்களுக்கிடையே சாதியா? என்ன நீர்; சொல்லுகிறீர் ஐயா”?

“உலகில் விளையாடும் பல விதமான விளையாட்டுக்களுக்கு ஏற்றாவறு உருவத்திலும், பருமனனிலும், நிறையிலும்;, கலரிலும், பந்துகளை பாவிப்தை நீ அறிவாயா”?

“நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் நான் ஒருவன் தான் பந்து இனத்தைச் சேர்ந்தவன்; என்று”

“நான் சொல்வதைக் கேள்.; எனக்கத் தெரிந்த மட்டில் பந்துகள் எல்லாம் உருண்டை வடிவமல்ல. முட்டை வடிவத்திலும் உள்ள பந்துகளையும் ரக்கர் போன்ற விளையாட்டில் பாவிப்பார்கள். மனிதர்களின்; தோற்றத்தில் வித்தியாசம் இருப்பது போல். மனிதர்களில் மெல்லியவர்கள். குள்ளர்கள், குண்டர்கள் , உயரமானவரகள் இருப்பதுபோல் என்று சொல்லேன்” .

“ கேட்கக் சுவர்சியமாக இருக்கிறது.”

“பந்து வடிவப் பொருளை விளையாட மாத்திரம் பாவிக்கிறார்கள் என்று நினைக்காதே. சுழலும் பந்து வடிவமுள்ள போல் பெயரிங் (Ball Beraing) உராய்வை எதிரத்து செயல் படக்கூடியவை. ஜிம்னாஸ்டிக் எனப்படும் உடற்பயிற்சிக்கு உருவத்தில் மிகப்பெரிய பந்தைப் பாவிப்பார்கள்.

சுர்க்கஸ் கோமாளிகள், மந்திரவாதிகள் . விஞ்ஞானிகள் கூட பந்து வடிவ உருவங்களை பாவிப்பார்கள். அது சரி உன்நிறை என்ன என்று உனக்குத் தெரியுமா”?

“நான் என்னை நிறுத்துப் பார்ததில்லை. டீம் எனனை கடையில் போய் பணம் கொடுத்து வாங்கியதாகக் கேள்விப்பட்டேன.”

“சரி நான் உனது நிறை, பருமன் பற்றி சொல்கிறேன் கேள் உனது சுற்றளவு 26 அல்லது 27 அங்குலம். நிறை சுமார் ஒரு இறாத்தல்.

“இவ்வளவு எல்லோரிடமும் உதை வாங்கியும் என்சுற்றளவும் நிறையும் குறையவில்லையே. ஆச்சரியம் தான்.” பந்து சொன்னது.

“ கிரிக்கட் மட்டையால் அடி வாங்கும் பந்து உன்னை விடச் சிறியது. தக்கை என்ற கோர்க்காலும், தோலாலும் செய்யப்பட்டது. அதன் உருவம் இரு அரைக் கொலங்களின் இணைப்பால் உருவானது. வழமையில் சிவப்பு நிறமாகவும் இரவில் வெளிச்சத்தில் விளையாடும்போது வெள்ளை நிறத்தில் அமையும். ஓன்பது அங்குல சுற்றளவும் 163 கிராம் நிறையும் கொண்டது. இது டெனிஸ் பந்தை விட நிறையும் சுற்றளவும் குறைந்தது. இவைற்றைவிட பில்லயர்ட்ஸ், டேபில் டெனிஸ். கோல்ப் விiயாட்டுகளில் பாவிக்கும் உன் இனத்தவர்கள் வேறுபட்ட நிறையும் உருவமும் கொண்டவர்கள். இப்போது உனக்குப் புரிகிறதா நான் ஏன் சாதியைப் பற்றி குறிப்பிட்டேன் என்று.”

“ மிரட்டுவதைப் பந்து விளையாடுவது என்று சிலேடையாகச் சொல்வார்கள். அவ்வளவுக்கு என்னை காலால் உதைத்து, மட்டையால் அடித்து பெயர் வாங்குவது மட்டுமல்ல மிரட்டுவதற்கும் பாவிக்கிறார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்”? பந்து குறைபட்டது.

“ சரி சரி எனக்கு என் நண்பரோடு கோல்ப் விளையாடப் போக நேரமாகிவிட்டது. பிறகு வேறு ஒரு நாள் நாங்கள் இருவரும் சந்தித்து மேலும் பல விஷயங்கள் பேசுவோம். உன்னைக் கவனித்துக் கொள். நான் வருகிறேன் என்று சொல்லி பந்திடம் இருந்து விடைபெற்றேன்.
*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (25-Oct-16, 4:36 am)
Tanglish : panthin parithaabam
பார்வை : 234

மேலே