சோம்பேறியின் சாதனை

அவன் ஒரு சோம்பேறி எனப் பலரிடம் பேயர்வாங்கினவன். நேரம் தவறாது சாப்பிட்டுவிட்டு தூக்கத்தில் கனவுகாண்பது தான் அவன் பொழுது போக்கு. தகப்பன் சகோதரர்களுடைய உழைப்பில் வாழ்பவன் எனப் பலிரின் விமர்சனத்துக்கு உள்ளானவன். வாழ்க்கையில் தன்னால் ஒன்றுமே சாதிக்க முடியாதென நினைத்து தற்கொலை செய்வது தான் சரி என முடிவுக்கு வந்தான். தனிமையை நாடி கையில் கையிற்றுடன் ஒரு காட்டுப் பக்கத்தைத் தேடி நடந்தான். நடந்த களைப்பில் ஒரு மரத்துக்கடியில் கையிற்றை வைத்துவிட்டுச் சற்று நேரம் தூங்கினாhன். தீடிரெனக் கையில் யாரோ கடிப்பது போல் இருந்தது அவனுக்கு. திடுக்கிட்டு விழித்தான். பல கட்டெறும்புகள் வரிசையாக அவனை பார்த்துச் சிரித்தபடி நின்றன.

“ என்னைக் கடித்தவிட்டு ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள “; என்றான் சோம்பேறி.

“சிரிக்காமல் என்ன எங்கைளை உன்னைப் பார்த்து அழச்சொல்லுகிறாயா? எங்களைப் பார் நாங்கள் எப்படி சுறுசுறுப்பாய் வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்று “ என்றது ஒரு எறும்பு.

“எனக்கு என்ன அப்படி வேலை இருக்குது செய்வதற்கு. வேலை கேட்டுப் பல இடஙகளுக்குப் போனால் வேலை இல்லை என்கிறார்கள்.”

“மனிதா எங்களை குளவி, தேனீ போன்று சமூகப் பூச்சிகள் என்பார்கள்” என்றது எறும்பு.

“அப்படியென்றால்?”

“சமூகத்தில் ஒரு தலைவனுக்குகீழ் எப்படி பலர் பலவிதமான தொழில்கள் செய்கிறார்களோ அதே மாதிரி தான் நாங்களும் செயலாற்றுகிறோம். அதுவுமல்லாமல சமூகத்துக்கு பல உதவிகளைச் செய்கிறோம். எங்கள் இனத்தின் உற்பத்திக்கு முக்கிய கர்த்தா யார் தெரியுமா?”

“யார் ?”

“அதோ இருக்கிறாளே குவீன் என்ற அந்த அரசி தான். அவளின் முழு நேர வேலை ஆயிரக்கணக்கில் முட்டைகளியிட்டு எம்மினத்தைப் பெருக்குவது. அவள் 15 வருடங்ள்களுக்கு மேல் வாழக் கூடியவள். அவளிடம் வேலசெய்பவர்கள் தான் அவளின் வேலைக் கூட்டம். ஒவ்வொருவருக்;கும் வயதுக்கேற்ப பல வேலைகளுண்டு. அதோ பார்த்;தாயா இலைகளை வெட்டித் தூக்கிக் கொண்டு செல்பவர்களை . அதில் கூட பலம்வாய்ந்;த வீரர்கள் தான் தடித்த இலைகளை வெட்டுவார்கள். அதுவுமன்றி எம்மை எதிர்க்க வரும் வேறு எறும்புக் கூட்டத்துடன் போர் புரிந்து தம்முயிரைப் பலி கொடுத்து எம்மை காப்பாற்றுவார்கள்.

“இலைகளை வெட்ட வெகு தூரம் செல்ல வேண்டிவருமோ,”

“பார்த்தாயா பார்த்தாயா உன் சோம்பேறித்தனம் உன்னை விட்டு போகிவில்லையே. இலைகளை வெட்ட நூறு மீட்டருக்கு அதிகமாக பிரயாணம் செய்ய வேண்டிவரும். சில சமயங்களில் 35 மீட்டர் உயரம் ஏறி இலைகளை வெட்டியபி;ன் தங்களுடைய நிறைக்கும் பார்க்க இரு மடங்கு கூடய நிறையுள்ள இலைகளை அவைகொண்டு செல்லும். ஒரு இரவுக்குள் ஓரு அல்லது இரு தடவை இப்படி வெட்டிய இலைகளைச் சுமந்து செல்வார்கள்;.”

“ இலைகளை என்ன செய்வார்கள்.?”

“தம் பொந்துக்குள் அவ்விலைகளை சிறு துண்டுகளாக, வெட்டி பூஞ்சை (Fungus) வளர்த்து உணவாக சாப்பிடுவார்கள். அதுவும் ஒரு வகை விவசாயமுறை.”

“அடேயப்பா இந்த சிறிய உடம்பினால் இப்படி பெரிய வேலை செய்ய முடிகிறதே. “

“இன்னும் இவர்களிடம் இருந்து நீ படிக்க வேண்டிய பாடங்கள் அனேகம் இருக்கு. மனிதர்களிடையே தொடர்பு கொள்ளும் திறமையை விட எங்களிடம் அத்திறமை கூடுதலாகவுண்டு. எதாவது இனிப்பானாக பொருளை ஒரு எறும்பு கண்டால், சில நிமிடங்களுக்குள். வரிசையில் பல எறும்புகள் அதை பகிர்ந்து எடுத்துச்செல்லச் செல்லும். ஆனால் மனிதன் அப்படியல்ல. தனக்கு மாத்திரம் தான் தான் கண்டு பிடித்தது சொந்தமென நினைப்பவன். இரகசியமாக மற்றவர்களுக்கு சொல்லாமல் தனக்குள் வைத்திருப்பான். அப்படி வரிசையாக செல்லும் எறும்புக் கூட்டத்துக்கு தடை ஏதும் வைத்தால் தீடிரென அந்தப் பாதையை மாற்றி வேறு சுருக்கமான வழியில் நாம் செல்லும் திறமை வாய்ந்;தவாகள். சுருக்கமான வழியில் நாம் அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடியவாகள் . எங்களின் செயல்முறைகளை அவதானித்து கணனியில் தகவல்களை எடுத்துச்வெல்லும் வழியினை பற்றிய ஆராச்சிகளை மனிதன் நடத்தியுள்ளான். “

“எப்படி தகவல்களை பரிமாறிக் கொள்கிறீர்கள்?. உஙகலாள்; தான் பேச முடியாதே?

“அன்டெனா (Antena) எனப்படும் உணரிகள் மூலம் தட்டி ஓசை எழுப்பியும் மணத்தின் மூலமும> தகவல்களை பரிமாறிக் கொள்வோம்;.”

“அது சரி எங்களைப்போல் உங்களிடையேயும் பல சாதிகளுண்டா?”

“ எங்களில் கிட்டத்தட்ட 12000 எறும்பு வகைகள் உண்டு.”

“நீங்கள் நல்லவர்களா?”

“நாம் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. இப்போது உன்னை கடித்ததினால் தான் எங்களைப்பற்றி பல விஷயங்களை உன்னால் அறிய முடிந்தது. அது நல்ல சிஷயமிலலையா“?

“வேறு எந்த விதத்தில் நல்ல காரியங்களைச் செய்கிறீர்களா?”

“ஏன் இல்லை. பூமிக்குள் காற்று உட்புக உதவுகிறோம். சில தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழித்து மனித இனத்துக்கு உதவுகிறோம். தேவையற்ற தாவரங்களை இல்லாமலாக்கிறோம். விதைளை பரப்பி பயிர்கள் வளர உதவுகிறோம்.”

“காஞ்சம் பொறு …மனித உயிரைக் காப்பாற்றி இருக்கிறாயா? “

“ஏன் இல்லை . கதை ஒன்று சொல்கிறேன. கேட்கிறாயா?.

“கதையா? சொல்லு சொல்லு.”

ஓரு நாள் ஒரு விறகு வெட்டி காட்டுக்குள் சென்று மரம் வெட்டி களைத்து வீடு திரும்பும் போது பாம்பு ஒன்று கடித்ததினால் உடம்பொல்லாம் விஷம் ஏறி மயங்கி விழுந்துவிட்டான்.”

“பிறகு பிறகு. அவன் இறந்;துவிட்டானா?”.

“இல்லை. சில மணிநேரத்துக்கு பிறகு கண்விழித்து பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை. உடம்பெல்லாம் எறும்புகள் கடித்ததினால் அவன் உடம்பில் இருந்த விஷம் நீங்கி அவன் பிழைத்தான்.

“ அது எப்படி?”

“அவன் விழுந்தது, ஒரு எறும்பு புற்றுக்கு மேல். தம் உயிரை பலி கொடுத்து அவனைக் காப்பாற்றியிருக்கின்றன அந்த எறும்புகள்.”

“அடேயப்பா பெரும் தியாகிகள் எனச் சொல்லு.”

“அது மட்டுமா இன்னொரு நாள் ஒரு புறாவை வெடிவைத்து கொள்ள ஒரு வேடன் குறி வைத்த போது அவன் காலைக்கடித்து அவனுடைய குறியை தவறச் செய்து, சில எறும்புகள் புறாவின் உயிரைக் காப்பாற்றிவிட்டன.”

“புறா நன்றி சொல்வில்லையா?.”

“ஏன் இல்லை ஒரு நாள் அதே எறும்புகள் மழைத் தண்ணிரால் அடித்துச் செல்ல இருந்த போது ஒரு பெரிய இலையை புறாக்கள் தஙகளுடைய அலகினால் கொத்தி கீழே வீழ்த்தி எறும்புகள் அதில் ஏறி தப்பிச் செல்ல உதவியுள்ளது.”

“இப்ப எனக்கு எப்படி உதவப் போகிறீர்கள.; “

“நீ மற்றவர்களை நம்பி சோம்பேரியாhய் வாழாமலிருக்க வழி சொல்லப் போகிறோம்.”

“வழியா. சொல்லுங்கள். முடிந்தால் செய்து பார்க்கிறேன்.”

“அதோ தெரிகிறதே அது என்ன ?”

“குப்பைமேடு. இது தெரியாதா எனக்கு”

“ வடிவாகப் பார். “

“ ஓ பேப்பர்களும், போத்தில்களும், கார்ட் போர்ட் பெட்டிகளும்.”

“இவைதான் குப்பைக்குள் பொக்கிஷங்கள். குபபைக்குள் கோமெதகம் என்று கேள்விபட்டிருப்பாயே”.

“டீகள்வி பட்டனான். குப்பைக்குள் போக்கிஷமா? என்ன கதைக்கிறீர்கள்”

“ஆமாம் குப்பையில் உள்ள மட்டைகள், பேப்பர்களை போறுக்கி, மடித்து எடுத்து, கப்பல் துறைக்கு எடுத்து செல் அவற்றை பதப்படுத்தி பேப்பர் செய்ய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்களிடம் கொண்டு போய் கொடு உனக்கு நாலு காசு கிடைக்கும்”

“சரி நீங்கள் சொல்லுகிறீர்களே என செய்து பார்க்கிறேன். எனக்கு காசு கிடைத்தால் அதிலை கொமிஷன் கேட்க மாட்டியளே?”

“உன் மனித புத்தி உன்னை விட்டு போகாது. நீ சொந்தக் காலில் நின்றால் எமக்கு சந்தோஷம். எங்களுக்கு வேலை கணக்க இருக்கு நாங்கள் வாறோம்”. எறும்புகள் புறப்பட்டுச் சென்றன.

*******

பல மாதங்களுக்கு பின் இதே எறும்புகள் அந்த சோம்பேறியை குப்பை மேட்டில் சந்தித்தன.

“ஏய் சோம்பேறி எப்படி இருக்கிறாய் ?” என்று அழைத்தன.

“ என்னை சோம்பேறி என்று கூப்பிட வேண்டாம். நான் இப்ப ஒரு தொழிளாளி. சொந்தமாக உழைப்பது மட்டுமன்றி, இயற்கையை சுத்தப்படுத்தி வாழ்கிறேன்” என்றான்.

“நீ ஒரு சாதனையாளன் என்று சொல். “ என்றன சிரித்தபடி எறும்புகள்.

“ ஆமாம் உங்கள் அறிவுரைக்கு நன்றி” என்றான் சோம்பேரியாக இருந்து சாதனையாளனாக மாறியவன்.

*******

எழுதியவர் : ( பொன் குலேந்திரன் - மிசிசா (26-Oct-16, 2:00 am)
பார்வை : 578

மேலே