பணத்தால் வாங்க முடியாத வரம் - மனம் நிறைந்த சிரிப்பு

மலையின் சிரிப்பு அருவியிலே
மனதின் சிரிப்பு கவிதையிலே.....!

மழையின் சிரிப்பு பூமியிலே
மண்ணின் சிரிப்பு வாசத்திலே....... !!

மனிதத் சிரிப்பு பணத்திலா ?! - சிற்றின்பமாய்
மறையும் சிரிப்பு புறத்திலா ?!

நிலைத்த சிரிப்பு அகத்திலே - குறையின்றி
நித்தமும் வேண்டும் இறைவனே...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (27-Oct-16, 6:57 am)
பார்வை : 364

மேலே