தனிமையின் மடியில்

தனிமையின் மடியில்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

சில நேரங்களில்
தனிமையின் மடியில்
நான் தவழ,

இருள் சூழ்ந்த
காட்டில் தனியே
மனம் பரிதவிக்க,

இமை இமைக்கும்
நொடி கூட
நெடு நேரம் நீள,

உயிர் துடிக்கும்
இதயம், உறவின்றி
வலியோடு ஏங்க,

இரு விழியின்
கருவிழி, ஒளி
இழந்து ஓய,

வாழ்க்கை பயணம்
விடியாமல், ஒரு
புரியாத புதிராய்,

தனியே இங்கு
வழியின்றி
என் உயிர் தவிக்க,

இவ்வாழ்வில்
துணை இன்றி,
உன் நிழல் கூட
இங்கு பொய்யே...

மனோஜ்.

எழுதியவர் : மனோஜ் (29-Oct-16, 7:27 pm)
Tanglish : thanimaiyin madiyil
பார்வை : 1067

மேலே