கருக்கலைப்பு

பிஞ்சு முகம் குட்டி குட்டி கண்கள் இந்த
உலகத்தை காண ஆசைப்படுகிறது
நீங்கள் அதைத்தடுப்பது நீயாயந்தானா ????

குழந்தை பிறந்தால் அழகு குறைந்து விடுமாம்
உங்கள் அழகியலே உங்கள் குழந்தை தான் உங்களுக்கு புரியாதா ????

இன்னும் நான் முன்னேற வேண்டும் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் ......
உங்கள் முன்னேற்றத்தின் முதல் படியே உங்கள் குழந்தை தான் தெரிகிறதா ???

இல்லை இல்லை இந்த குழந்தை உலகிற்கு வந்தால் அசிங்கம்
அசிங்கத்தை உங்கள் மேல் வைத்து கொண்டு குழந்தை மேல்
குற்றம் சுமர்துகிரிர்களே குற்றவாளி நீங்கள் மட்டுமே ........

குழந்தையின் வாசத்தை சுவாசித்திருக்கிறிர்களா ....???
கலங்கம் இல்லா தெய்வங்கள் குழந்தைகள் .......
குழந்தையின் அழுகையையும் , சிரிப்பையும் ரசித்து பாருங்கள்
வாழ்வில் பாதி துன்பங்கள் வந்த வழி தெரியாமல் ஓடி விடும் ......

தயவு செய்து கருக்கலைப்பை வளர்த்து விடாதீர்கள்
பூமி பார்க்க காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் சிரிப்பும்
ஓலமாக மாற்றி ரத்தத்தீட்டாக வெளியேற்றி கொண்டிருக்கிருகிறிர்கள் ......

குழந்தையின் சிரிப்பில் பூமி விடியட்டும் .....

எழுதியவர் : க.நாகராணி (1-Nov-16, 12:04 pm)
Tanglish : Karukkalaippu
பார்வை : 647

மேலே