புள்ள

மலையளவு வேதன மனசுக்குள்ள - நான்
தள்ளாடி நிக்கையில புள்ள...
என்னோடு நீ வந்து சேர்ந்த வேளை
கட்டுண்டு போனேன் உன் பாச வலையில
கவலையெல்லாம் காணாம போச்சு மெல்ல
தினம் உன்னை காண துடிக்குறேனில்ல
கணப்பொழுதேனும் - என்
கண் முன்னே வந்து போ புள்ள
எக்க செக்க ஏக்கங்கள் மனசுக்குள்ள
பிடி சோறெனும் தின்ன வேணும் உன் கையால
ஒரு பாதி வாழ்க்கையைத்தான் தொலைச்சேன் புள்ள
மிச்ச மீதி காலத்தை நான் வாழனும் புள்ள
உன்னோடு கைகோர்த்து வெகுதூரம் செல்லனும் புள்ள
உலகமே என்னதுன்னு நான் சொல்லணும் புள்ள
உவகையில உள்ளம் துடிக்கணும் புள்ள
உன் மடியில என் உசுரு போகணும் புள்ள
உன் மடியிலதான் என் உசுரு போகணும் புள்ள !!!

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (6-Nov-16, 5:26 pm)
Tanglish : pulla
பார்வை : 169

மேலே