அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சாமீபம்

8-Nov-2016

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – சாமீபம்

வார்த்தை : சாமீபம்
பொருள் :
சமீபம்
அண்மை,
பதவி,
கடவுளை அணுகி இருக்கும் நிலை
கிரியை வழி முக்தி-சற்புத்திர மார்க்கம்-சாமீபம்-திருஞான சம்பந்தர்

1.
பாசம் பசு ஆனது ஆகும் இச் சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இச் *சாமீபம்*
பாசம் சிரம் ஆனது ஆகும் இச் சாரூபம்
பாசம் கரைபதி சாயுச்சியமே.

ஐந்தாம் தந்திரம், திருமந்திரம் - திருமூலர்

பாசம் பசுப்போல் நெகிழ்ச்சியுறுநிலை சிவ அண்மையில் சிவவுலகமாகும். அப் பாசம் அருள்போல் வருத்துவதொழிந்து பொருந்து மளவானிற்பது சிவனண்மையாகும். பாசம் தோற்றத்தளவானிற்பது சிவவுருவமாகும். பாவம் அத் தோற்றமும் ஒடுங்கி நிற்பது சிவனாதலாகும்.

2.
சாலோக *சாமீப* பதவி
ஆச்சப்பா சரியைவழி நடந்தோர்க்கப்பா
அப்போதே சாலோக பதவியாகும்
பேச்சப்பா கிரியைவழி நடந்தோர்க்கப்பா
பெருமையுடன் சாரூப பதமேயாகும்
நீச்சப்பா யோகவழி நடந்தோர்க்கையா
நிசமான *சாமீப* பதவியாகும்
மூச்சப்பா ஞானவழி வந்தோர்க்கையா
முத்தியுள்ள சாயுச்சிய பதவிதானே

அகத்தியர் சௌமிய சாகரம்

சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நாற்படிகளில் பெரும் நன்மைகளை அகத்தியர் இப்பாடலில் பட்டியலிடுகிறார். சரியை சாலோக்கியத்தையும் கிரியை சாரூபத்தையும் யோகம் சாமீப்பியத்தையும் ஞானம் சாயுஜ்யத்தையும் அளிக்கின்றன என்கிறார் அவர். இந்த நான்கு நிலைகளையும் பெறுவது பதமுக்தி எனப்படுகிறது.

எழுதியவர் : அரிஷ்டநேமி (8-Nov-16, 8:41 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 819

சிறந்த கட்டுரைகள்

மேலே