அப்பா

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசத்தைக் உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு கை அழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா...
முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப்பற்றி பெருமையாய் அப்பா பேசிக் கொண்டிருந்ததை...
அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும்போது...
உன் அப்பா எவ்வளவு உற்சாகமாய் இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடம் சொல்லும் போது தான் எனக்குத் தெரியும் எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...
கேட்ட உடன் கொடுக்க முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்...?
சிறு வயதில் என் கை பிடித்து நடைபயில சொல்லிக் கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்...?
லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமறியபோது பதறாமல் இருக்கிறார் மீளாதுயலில்....
அம்மா செல்லமா அப்பா செல்லமா எனக் கேட்ட போதெல்லாம் பெருமையாய் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என --- இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்...?
எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்...?
சொல்லிக் கொடுத்ததில்லை, திட்டியதும் இல்லை, இல்லையென்று சொன்னதுமில்லை, வேண்டாம் எனக் கூறியதுமில்லை, இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு...
நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை...

அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...

போன நாட்களை நினைத்து வருந்தி அழும் மகள்...
மேகா

எழுதியவர் : Megharaj (11-Nov-16, 1:37 pm)
Tanglish : appa
பார்வை : 729

மேலே