இதுதாங்க காதல்

பிரவீனுக்கு எப்பொழுதும் காலையில் வாக்கிங் போவது பழக்கம்
அதிகாலையில் ஜில்லென்ற காற்று .....
லேசான குளிர் ..... ஜுவை கட்டிக் கொண்டு அரைக்கால் பேண்டுடன் ஓட தயாராகினான்
எப்பொழுதும் நடக்கும் பாதை தான் அது , அங்கு அனைவரும் பழக்கமே
நடந்து முடிந்த பின்பு உடற்பயிற்சி செய்து விட்டு சற்று அமைதியாக அங்கு இருக்கும்
ஸ்டோன் பெஞ்சுகளில் அமருவது அவன் பழக்கம்
அன்றும் அப்படி தான் வியர்வை வழிய அமர்ந்திருந்தான்
ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்தப்படி பார்வையை அந்தப்பக்கமாக திரும்பினேன்
பவ்யமான பெண் மிகவும் அமைதியானவள் போல தெரிகிறது
அங்கங்கே லேசான வியர்வை வாக்கிங் போனதற்கான அறிகுறி
ஹெட்போன் மாட்டிக்கொண்டு ஏதோ பாடலை முனுமுனுத்தப்படி இருந்தாள்
அவளை பார்த்ததும் பார்வையை திருப்ப மனம் வரவே இல்லை .....
வரிசையாக இருந்த இருக்கைகளில் பிரவீனுக்கும் அவளுக்கும் ஒரு பத்து இருக்கை தள்ளி இருக்கும் ,,,,
பிரவீன் அவளையே பார்ப்பதை சுதாகரித்துக் கொண்டவள் உடனே கிளம்ப தயாரானாள் ,,,,,,
இரவெல்லாம் பிரவீனுக்கு உறக்கமே பிடி படவில்லை ,,, காலையில் விடிந்ததும் எப்பொழுதும் போல '
வாக்கிங் கிளம்ப தயாரானான் அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள்ளே இருந்தது
தூரத்தில் இருந்து அவளை பார்த்ததும் அவனுக்குள்ளே ஜிவ்வென்று இருந்தது
இன்று அவள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு ஒரு எட்டு இருக்கை தள்ளி அமர்ந்தான்
அவளும் அவனை பார்த்ததும் தன்னை சுதாகரித்து கொண்டு நகர்ந்தாள் ....
இப்படியே சில நாட்கள் கடந்தன ...
உண்மையில் அவளுக்கும் அவனை பிடித்து விட்டது எப்பொழுதும் அவனை பார்த்தல் ஒரு
சிநேகமான புன்னகையை கொடுத்துக் கொண்டே இருப்பாள் ....
அவளுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும் போல எப்பொழுதும் காதில் ஹெட்போன் மாட்டி எதாவது பாடலை முனுமுனுத்தப்படியே இருக்கிறாள் ........
அன்று கட்டாயம் அவளிடம் தன் காதலை சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்தான்
ஒரு சிகப்பு நிற மொட்டான ரோஜா பூவை வாங்கினான் வாக்கிங் போவதற்கு
எப்பொழுதும் போல தயாராகினான் ....
பட படவென அடித்துக் கொண்ட இதயத்தில் ரோஜா பூவை கையில் ஏந்தியபடி
அவளை நோக்கி சென்றான்....
அவன் அவளை நோக்கி வருவதை அறிந்து அவளுக்கும் இதயத் துடிப்பு அதிகமானது ...
ரோஜாவை அவளின் முன் நீட்டி காதலை சொல்ல வரும் விதமாக
" உன் காதோரத்தில் எப்பொழுதும் கேட்கும் இசையை உன்னுடன் சேர்ந்து நானும் கேட்கலாமா "???
இதுவும் ஒரூ வகை காதலை சொல்ல வரும் யுக்தி தானே
அவள் அதே சிநேகமான புன்னகை தன் அன்று காட்டிய அதே புன்னகை
தனது ஹெட்போனை கலட்டி விட்டு சைகையில் "காதும் கேட்காது வாயும் பேச வராது " என சொன்னாள்
சொல்லி விட்டு தலையை கீழே சாய்த்து நின்றாள்
நிமிர்ந்து பார்த்தாள் அவன் இல்லை சரி அவனும் எல்லா ஆண்களை போல தானே
என நினைத்துக் கொண்டு எப்பொழுதும் போல நடக்க தயாரானாள்
சட்டென அவளின் முன் மண்டியிட்டு தன் காதல் கடிதத்தை கொடுத்தான் பிரவீன்
ஆச்சர்யத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கடிதத்தை பிரித்து பார்த்தாள்
" நான் இதற்கு முன் உன்னை காதலிக்க வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் இப்பொழுது சொல்கிறேன்
நீதான் என் மனைவி நான் எல்லா ஆண்களை போலவும் இல்லையடி பெண்ணே , காலம் முழுக்க உன்னை என் முதல் குழந்தையாக பார்ப்பேனடி என் தங்கமே " என்ற வார்த்தைகளை பார்த்ததும் அவளுள் இனம் புரியாத சந்தோசம் அவனின் கை பற்றும் போது தன் மறைந்த தாயின் நினைவுகளை கொண்டு வந்தது
இது தான் காதல் என்று புரியும் அளவிற்கு வாழ வேண்டும் என்று நினைத்துக் கொன்டு இரவரும் நகர்ந்தனர்
இருக்கைகள் அவர்களுக்கு நேசத்துடன் பிரியா விடை கொடுத்து அனுப்பியது ....

எழுதியவர் : க.நாகராணி (11-Nov-16, 2:05 pm)
சேர்த்தது : நாகராணி
Tanglish : ithuthaanga kaadhal
பார்வை : 940

மேலே