ஒளியென்ற கீற்றின் இருட்டில்

ஒளியென்ற கீற்றின் இருட்டில்...

ஆசனப் பரிமளங்களில்
விசக்கொல்லிகள்
விளையாடிக் சென்றதில்
நேசக் கைகள் ஈசனிடம்
இறைஞ்சிக் கேட்டன
இன்னொரு நாள் தவம்.

பவளமல்லிப் பாறைகளின்
பகலிரவு ஆட்டத்தில்
சமுத்திர கையெங்கும்
சத்திழந்த உயிர்த்திரவங்களின் சவம்.

இன்றைக்கு இரந்து
நாளைக்கு இறக்கும்
மூப்பான வாலிபம்
நாளை நடப்பது அறியாமல்
நடைபாதை வாசிகளின் பாதையில்
வீசிச் சென்றது கபம்.

ஒரு மௌனமும் மன்னிக்கப் பழகியதால்
மார்தட்டிய மூர்க்கங்கள்
ஆகாயவாலை அக்குளுக்குள்
சுருட்டிக் கொண்டு
இந்த ராச பாட்டையில்
எந்த சகடமும் இதுவரை செல்லவில்லை
என்பதோடு சுபம்.

ஒளியென்ற கீற்றின் இருட்டில்
ஒளியென்ற ஒன்றாக
ஒரு இருபதும்...
ஒரு அறுபதும்.

சுசீந்திரன்.

எழுதியவர் : சுசீந்திரன் (11-Nov-16, 3:37 pm)
பார்வை : 83

மேலே