உண்மை

"போதுமான ஆடை இன்றி ஆடை தேடுவதும் இந்த -இந்தியாவில் "
"போகிக்கு ஆடை எரிப்பதும் இந்த - இந்தியாவில் "

"கோடி கணக்கில் பணம் வைத்து இருப்பதும் இந்த - இந்தியாவில்''
''தெரு கோடியில் பிச்சை எடுப்பதும் இந்த- இந்தியாவில் ''

''அரசு பள்ளிக்கு வேண்டாம் என்பதும் இந்த - இந்தியாவில்''
''அவரே அரசு வேலை வேண்டும் என்பதும் இந்த -இந்தியாவில்"


"அரசு மது கடை இந்த -இந்தியாவில்"
"தனியார் பள்ளிகள் இந்த -இந்தியாவில்"

"பசுமை புரட்சி இந்த -இந்தியாவில்"
"பசிக்கு இறப்பது இந்த -இந்தியாவில்"

" இலவச சிம் கார்டு இந்த -இந்தியாவில்"
" பண கல்வி இந்த -இந்தியாவில்"

" ஏசி வாழ்க்கை இந்த -இந்தியாவில்"
" மின்சாரம் காணாத கிராமங்கள் இருப்பதும் இந்த -இந்தியாவில்"

"கருப்பு பணம் இந்த -இந்தியாவில்"
"பருப்பு வாங்க பணம் இல்லாமல் இருப்பதும் இந்த -இந்தியாவில்"

"பல கோடி மக்கள் இந்த -இந்தியாவில்"
" பல கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கியில் ( இந்திய பணம்)

எழுதியவர் : ராஜு முருகன் (13-Nov-16, 2:21 am)
Tanglish : unmai
பார்வை : 376

மேலே