ஏழுமலை

புதுசா வகுப்பில சேந்திருக்கற பையா உம் பேரு என்னடா?
@@@@@
எம் பேரு ஏழுமலை-ங்க அய்யா.
@@@@@
உங்கப்பா படிச்சவரா படிக்காதவரா?
@@@@!
அய்யா, எங்கப்பா முனைவர் (Ph.D) பட்டம் வாங்கினவரு. அரசு கலைக் கல்லூரில தமிழ்ப் பேராசிரியரா இருக்காறாருங்க அய்யா.
@@@@@@
என்னடா உங்கப்ப டாக்டர் பட்டம் வாங்கின தமிழ்ப் பேராசிரியர்-ன்னு சொல்லற ஆனா பெத்த மகனுக்கு கொஞ்சங்கூட பொறுப்பில்லாம தமிழ்ப் பேர வச்சிருக்காரு. ஏண்டா எனக்குத் தெரியாத தமிழ்ப்ப் பேராசிரியர்கள் யாருமே இல்ல. உங்கப்பாவைத் தவிர எந்தத் தமிழாசிரியரும்/ தமிழ்ப் பேராசிரியரும் தன்னோட பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வச்சதா நாங் கேள்விப்பட்டதில்லடா ஏழுமலை, எட்டுமலை. "நீ போயி உங்கப்பாகிட்டச் சொல்லி நல்ல இனிமையான இந்திப் பேரா வைக்கச் சொல்லுடா ஏழு.
@@@@@
அய்யா ஏழுமலைக் கடவுள்தான் எங்க குலதெய்வம் அதப் போயி மாத்தச் சொல்லறீங்களே?
"@@@
என்னடா படவா எதுத்துப் பேசிட்டு இருக்ககற? குலதெய்வம் பேரா? அப்பிடி இருந்தாலும் அத இந்திப் பேர மாத்தலாண்டா? உம் பேர "சப்தகிரி-ன்னு மாத்தச் சொல்லி என்னோட நல்லாசிரியர் விருது வாங்கின தமிழாசிரியர் ராஜேஸ்வர் சொன்னார்"ன்னு உங்கப்பாகிட்ட சொல்லுடா ஏழு எட்டு.
@@@@@
அய்யா உங்க மாதிரி தாய்மொழிப் பற்று இல்லாதவங்க எல்லாம் சினிமா ரசிகர்களா இருக்கத்தான் தகுதியானவங்கன்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு. உங்க மாதிரி ஆசிரியர்களாலதான் தமிழே சீரழிஞ்சுட்டு வருதுன்னும் சொல்லுவாரு. நாளைக்கு மொதல் வேலையா மாவட்டக் கல்வி அதிகாரிகிட்ட உங்களப்பபத்தி ஒரு புகார் மனு குடுத்துட்டு எங்கப்பா நம்ம தலைமை ஆசிரியர்கிட்டயும் வந்து பேசுவாரு.
@@@@@
போடா ஏழு, எட்டு. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாதவங்கடா இந்த பனங்காட்டு நரிங்கக. நானும் நம்ம தலைமை ஆசிரியரும் 20 வருசமா இதே பள்ளில வேல பாக்கறண்டா. நீங்க எங்க புகார் குடுத்தாலும் எங்கள ஆட்டவோ அசைக்கவோ முடியாதடா முட்டாள். அரசியல் செல்வாக்கு உள்ளவங்கள உங்க குலதெய்வம் ஏழுமலையானே வந்தாலும் ஒண்ணும் கிழிக்க முடியாது. போ...போ... நாளைக்கு கையோட டிவிக்காரங்களையும் கூட்டிட்டு வா, எனக்கும் நம்ம தலைமை ஆசிரியருக்கும் உலகம் தழுவிய இலவச வெளம்பரம் கெடைக்கும். சென்று வா மாணவனே சென்று வா....
@@@@@@@@@@@!!@!@@@@@@@@@@
கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்றாலும் ஆசிரியர்களில் 98% பேருக்கும் அதிகமானவர்கள் தாய் மொழி மீது அணுவளவும் பற்று இல்லாதவர்கள் என்பதை அனுபவத்தின் வழி அறிந்து ஆதங்கப்படுவன் நான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ படம்: நன்றி : தமிழ் மித்ரன்

எழுதியவர் : மலர் (15-Nov-16, 5:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 214

மேலே