விளைச்சல் -அறிவியற் கதை

என் சினேகிதி கலைச்செல்வி கொம்பியூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது.

“ அபர்ணா, இயற்கைதான் இறைவன். மரங்களும், தாவரங்களும், நதிகளும், ஏரிகளும், மலைகளும் இயற்கையின் பிரதான அங்கங்கள். இயற்கையில் பல விதமான மூலிகைச் செடிகள் உண்டு. ரிஷகளும், சித்தர்களும் அச்செடிகளைப் சித்த வைத்தியத்துக்குப் பாவித்திருக்கிறார்கள்.; தீர்க்க முடியாத நோய்களைத் குணப்படுத்த, தற்காலத்தில் பல மூலிகைகளை உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். நீரழிவுக்கும் . சிறு நீரக வியாதிக்கும் சீனாவில் மூலிகை மருந்துகள் உண்டு. எங்களுடைய கிராமபுரத்து பச்சைப்பசேல் என்ற தோற்றமுள்ள வயல் வெளிகள் பார்பதற்காக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் அதனால் கிடைக்கும்; பயன்கள் பல. உணவு தருகிறது. விவசாயிகளுக்கு வருமானம் வருகிறது. வயலில் வேலை செய்வதால் தேகநலம் கெடாது. அதுமட்டுமல்ல புத்தர் போன்ற பல ஞானிகளும், ரஷிகளும்,; சித’தர்களும் மரத்தின் கீழ இருந்தே தியானம் செய்து முக்தி; பெற்றதை நாமறிவோம். இந்துமதத்தில் கூட தல விருட்சத்துக்கு தனி மதிப்புண்டு. குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் மரத்தை பல தடவை சுற்றி வந்து வணங்கி பிள்ளை வரம் வேண்டுவார்கள். வட அமெரிக்க பூர்வகுடிமக்கள் இயற்கை கொடுத்த மரங்களை தெய்வமாகக் கருதுபவர்கள். மரங்கள், தம்மில்; உள்ள நேர்மறைச் சக்தியை தன் கீழ் அமர்ந்து தியானம் செப்பவர்களின் எதர்மறைச் சக்தியை நீக்கி தன் நேர்மறைச் சக்தியைப் பகிர்ந்து, மனித சக்தியை பரிசுத்தப்படுத்துகிறது. இது முக்திக்கு வழிவகுக்கிறது இவ்வாறு தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற என் சினெகிதி கலைச்செல்வி மரங்களைப் பற்றி எனக்கு ஒரு லெக்சர் கொடுத்தாள்;.

“ அது சரி செல்வி தாவரவியல் கற்றபின் மேலும் ஆராச்சி செய்ய உனக்கு நோக்கம் ஏதும் இல்லாயா?

“ ஏன் இல்லை. தாவரங்களின் வளர்ச்சியும் அவையின்; விளைச்லகள் பற்றி ஆராச்சி செய்து வருகிறேன். இது உணவு உற்பத்திக்கு வழிவகுக்கும். உரம் போட்டு வளர்ச்சியையும்; விளைச்சலையும் அதிகரிப்பதை நான் ஆதரிப்பவள் அல்ல” எனறாள் செல்வி.

“ ஏன் அப்படி சொல’லுகிறாய்”?

“ கடைகளில் கிடைக்கும் உரம், பல இரசாயனப் பொருட்கள் கலந்தது. நிலத்தை பாலடைய செய்து விடும். வயல்களில் உள்ள நீருடன் இரசாயனம் கலந்து, அந் நீர் வாய்க்கால் வழியே ஓடி, நதியோடு கலப்பதால் நதியை அசுத்தப்படுத்துகிறது.”

“ அப்போ வயலில் விளைச்சலை அதிகரிக்க உரம் பாவிக்க கூடாது என்கிறாயா’?

“ நான் அப்படி சொல்லவில்லை. இயற்கையில் கிடைக்கும் உரமே நல்லது”

“ அதென்ன இயற்கையான உரம?

“மண் புழு உரம், இயற்கை வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கம். கால்நடைகளின் சாணம்இ இலை, தழை, பாசி வகைகள், கோழி எச்சம், மாட்டுச் சாணம், தென்னை நார்க் கழிவு போன்ற கழிவுகளை உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேற்றுகின்றன. கழிவுப் பொருட்கள் அவற்றின் உடலில் செரித்த பிறகு, சத்து மிகுந்த கழிவாக வெளியேற்றுகிறது. இக்கழிவுடன் மண்புழுவின் உடலில் இருந்து வெளிவரும் தாவர வளர்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகிய திரவங்களும் வெளியேறுகின்றன. எனவே, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் ஒருங்கே அடங்கியுள்ள சிறந்த இயற்கை உரமாக மண்புழு உரம் கருதப்படுகிறது.”“

“அதுசரி செல்வி விளச்சலை அதிகரிக்க வேறு இயற்கையான வழி உண்டா”? நான் கேட்டேன்.

“ சில மாதங்கள் பொறுத்திருந்து பார் நான் செய்யும் பரிசோதனை நல்ல முடிவை தருமாகில் விளைச்சலில் புது புரட்சியை உண்டுபன்னலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு” என்றாள் செல்வி.

*******

யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே 14 கிமீ தூரத்தில் வழுக்கை ஆறு தழுவிச் செல்லும் கிராமம் அளவெட்டியூர். பசுமை நிறைந்த வயல் வெளிகள். பல நாதஸ்வர வித்துவான்களை உருவாக்கிய ஊர். அந்தக் கிராமத்தில் நாதஸ்வர வித்துவான் நாகநாதனை தெரியாதவர்கள் இல்லை. சண்முகம் வீதியில் எப்போதும் நாதஸ்வர ஒலி கேட்டபடியே இருக்கும். நாகநாதனின் தந்தை சண்முக சுந்தரம் அளவெட்டிக்குத் தன் நாதஸ்வர இசை மூலம் சிறப்பைக் கொண்டு வந்தவர். பல விருதுகள் பெற்றவர். ஆறுமுகம் பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆகிய வித்துவான்களிடம் தேர்ச்சி பெற்றவர். இசைக் கலை மூலம் செல்வம் சேர்த்து, பல வயற்காணிகளுக்குச் சண்முகசுந்தரம் சொந்தக்காரானார். அவர் செல்வம் சேர்த்த வழியே அவரின் ஒரே மகன் நாகரத்தினமும் தன் சொந்த உழைப்பால் ஒரு பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரன் ஆனார். அவரின் மகள்; கலைச்செல்வியும் நானும் ஒன்றாக சிறுவயது முதற்கொண்டே படித்தவர்கள். என் வீடு செல்வியின் விட்டில் இருந்து சண்முகம் வீதியில் அவள் வீட்டுக்;கு ஐந்து வீடுகளுக்கு வடக்கே இருந்தது. நாங்கள் வசித்த வீதிக்கு செல்வியின் தாத்தாவும், காலம் சென்ற பிரபல நாதஸ்வர வித்துவானுமாக இருந்த சண்முகசுந்தரத்தின் நினைவாக சண்முகம்; வீதி என்ற பெயர் இருந்து வருகிறது. சண்முகசுந்தரம் பலவருடங்களுக்கு முன் மிக பிரபல்யமான நாதஸ்வர வித்துவானாக இருந்தவர். அவரின் ஒரே மகன் தான்; செல்வியின் தந்தை நாகநாதன் அவரும் பிரபல நாதஸ்வர வித்துவானாக வருவதற்கு அவரின் தந்தையே முக்கிய காரணம். செல்வியின்; அண்ணன் தட்சனாமூர்த்தி, தந்தை நாகநாதன் நாதஸ்வர வாசிக்கும் கோவில்களிலும் இசைவிழாக்களிலும், நிட்சயம் தவில் வாசிப்பான்.

நாகநாதன் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் என்றே சொல்லாம். அவரின் மகள் கலைச்செலவி பரதநாட்டியத்தை முறைப்படி கற்றவள். அவளின் தாய் தர்மாம்பாள் ஒரு நல்ல பாட்டுக்காரி. கர்நாடக சங்கீதத்தை விரும்பி கற்றவள். சினிமா பாடல்கள் பாடுவதைத் தவிர்த்தாள் ஆனால் தர்மாம்பாள் பாரதியார் பாடல்களை பாடும் போது மெய்மறந்து கேட்டுக்கோண்டிருக்கலாம்.

செல்விக்கும் தந்தை நாகனாதனுக்கும் இசைமடடுமல்ல தாவரங்கள மேலும் அதிக ஆர்வமிருந்தது. அவர்களது பெரிய வளவு உள்ள வீட்டில் பல விதமான மலர்செடிகளும், பழம் மரங்களும் இருந்தன. தினமும் தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்து அரைமணி நேரமாவது நாதஸ்வரம் வாசிப்பதில் நாகநாதன் அமைதி கண்டார். அவரொடு சேர்ந்து அவர மகன் தட்சணாமூர்த்தியும் தவில் வாசிப்பான்.

செல்வி தாவரவியலில் படித்து பட்டம் பெற்றபின் அளவெட்டி அருனோதயா கல்லூரியில் ஆசிரியையாக இருந்தாள். என்னையும் அத் துறையில் படிக்கும்படி அவள் வற்புறுத்தியும,; எனக்கு பௌதிகத்தின் மேல் தனி விருப்பம்.

“ அபர்ணா ஏன் உனக்கு பௌதிகத்திலும் கணிதத்திலும் இவ்வளவு மோகமோ தெரியாது. நீயும் தாவரவியலை என்னோடு சேர்ந்து படித்திருக்கலாமே” என்பாள் செல்வி; அடிக்கடி.

“ செல்வி எந்தப் பாடம் எனக்கு விருப்பமோ அதைத் தான் நான் படிக்க விரும்புகிறேன். என் அம்மா ஒரு கணிதம் கற்பிக்கும் ஆசிரியை. எனது அப்பா ஒரு பொளதிக ஆசரியர். அதுதானோ என்னவோ எனக்கு கணிதத்திலும்; பௌதிகத்திலும் ஈடுபாடு வர் காரணம’” என்பேன்

“ அபர்ணர் நீ என்னை போல் பரதநாட்டியம் அல்லது இசை கற்கலாமே”.

“ செல்வி உன் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். அது உங்களுக்குள் பரம்பரையாக வந்திருக்கிறது. எங்கள் குடும்பம் அதற்கு முற்றிலும் வேறுபட்டது. எனது தநதை ஒரு பௌதிகப் பட்டதாரி. மகாஜனா கல்லூரியல் அசிரியராக இருக்டகிறார். எனது தாய் அதே கல்லூரியில் கணித ஆசரிiயாக இருக்கிறா. அவர்களின் பாதிப்பு என்னை பௌதிகத்துறையில ஆர்வம் காடட் வைத்ததால் அத்துறையில் படித்துப் பட்டம் பெற்றேன. அது சரி செல்வி உன்னிடம் ஒருகேள்விகேட்க வேண்டும்.”

“ கேள் அபர்ணா”

“ நீயும் நானும் ஒனறாக போய் திருநெல்வேலி பண்ணையில் ரோஜா செடிகள் வாங்கி வந்து நட்டோம். ஏன் என்; செடிகள் இன்னும் பூக்கவில்லை? எங்கள் வீடடு;த் தோட்டத்து மா மரம் காயப்பது குறைவு. ஆனால் அதற்கு எதிர்மாறகா உன் வீட்டு ரோஜா செடிகள் வளர்ந்து பூத்து குலுங்குகிறது. உங்கள் தோட்டத்து மாமரங்களிலும், பலா மரங்களில் நிறம்ப பழங்கள் உண்டு. அதெப்படி செல்வி “?

“ அபர்ணா நான் சொல்வதை சற்று கவனமாகக் கேள். நான் செய்த பரிசோதனை ஓரளவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்”

“ எனக்கு விளங்கவில்லை. விபராமாய் சொல்”

“ இசையை உருவாக்குவது வௌ;வேறு அதிரவுகள் கொண்ட ஒலி அலைகளே. ரிஷிகள் மந்திரங்கள் ஜெபித்து சாதனை படைத்தார்கள் . அதே போல் எங்களி வீட்டில் நான் பரதநாட்டியம் ஆடும் போது ஒலிக்கும் சலங்கை ஒலியானது என் வீட்டு ரோஜா செடிகளைப் பூத்துக் குழுங்கவைத்தது. என் அப்பா பின் வளவில் இருந்து இயற்கையை இரசித்தவாறு நாதஸ்வரம் வாசிப்பார். அதோடு மட்டுமல்ல எங்கள் வயற் காணிக்கு அடிக்கடி சென்று அங்கும்; வாசிப்பார். அதன் விளைவாகவே எங்கள் வயற்காணியில் மற்றவர்களின் வயல்களை விட பல மடங்கு விளச்சல். இதெல்லாம் ஒலி அலைகள் செய்யும்; சூட்டசுமம். அவ்வலைகள் மரங்களுக்கும் நெற்கதிர்களுக்கும் எடுத்து செல்வது நேர்மறையான சக்தி. அச்சக்தியை பெற்றதினால் உரம் போடாமல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இது நான் செயத பரிசோதனையில் கண்ட உண்மை. இதை நான பரிசோதித்தப் பின்னர் அப்பாவை எங்கள் தோட்டத்திலும் வயற்காணியிலும் அவரை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னேன். அதன் காரணத்தை விளக்கினேன். அவர அது சாத்தியமா என்று தமிழ் நாட்டில் உள்ள அண்ணாமலை பலகலைக் கல்லூரி இசைத் துறை சார்நதவர்களிடம் விசாரித்தார். அவர்களும் அது நடப்பது சாத்தியமே என் சொன்னாரகள் அபர்ணா” என்றாள் செல்வி.
நான் அதிக விளைச்சலுக்கு அவள் சொன்ன விளக்கததை கேட்டு அதிசயப்பட்டேன். “ஒலியின மகத்துவம் தான் என்ன வெளவால்கள் கூட ஒலி அலைகள் மூலமே திசைளை அறந்து பறக்கின்றன. அது மட்டுமல்ல வைத்திய துறையலும் ஒலி அலைகள் பாவிக்கப்டுகிறத எனபது எனக்கு தெரியமு;. அதை அலடிராசவுணட் எனபாரகள். ஆகவே சொலவதை நான ஏற்றுக்கொளகிறேன் செல்வி” என்நேன் நான.

“அபர்ணா இன்னொன்று உனக்குச சொல்ல மறந்து விட்டேனே. எங்கள் வயற்காணிக்கு அரசாங்க விவசாய இலாக்காவில் இருந்து அதிக விளைச்சலுக்காக முதல் பரிசும், விருதும் கிடைத்திருக்கிறது.

“ அப்போ செல்வி உங்கள் தோட்டத்து மாமரங்கள் இப்படி இலை தெரியாமல் காய்த்து குழுங்கியதுக்கு பரிசு கிடைக்கவில்லையா” நான் கெட்டேன்.

“ ஏன் இல்லை. ஒரு பெட்டி நிறம்ப கறுத்தகொழும்பான், அம்பளவி மாம்பழங்களை உனக்கு என் பரிசாக வைத்திருக்கிறேன்” என்றாள் சிரித்தபடி செல்வி. அதை ஆமோதிப்பது போல் அவள் அண்ணனின் மங்கள தவில் ஓசை கேட்டது.
********
(யாவும் கற்பனையே)

எழுதியவர் : ( பொன் குலேந்திரன் - கனடா) (17-Nov-16, 9:51 am)
பார்வை : 200

மேலே