ஓர் வரம் வேண்டும்

என்ன புண்ணியம் செய்தேன் இறைவா
என்னை மலரெனத் தாங்குதே ஓர்இதயம்
தன்னை வருத்தி என்னை ஈன்றாள்
ஜென்மம் மீண்டும் எடுத்துப் பிறந்தாள்......


கருவில் ஈரைந்து திங்கள் சுமந்தாள்
கருவிழியாய் காலம் முழுதும் சுமக்கின்றாள்
ஒருநொடி பொழுதும் பிரியாது இருக்கின்றாள்
கருணை மழையில் நாளும் நனைக்கின்றாள்......


மேகத்தில் பூக்காத பெண் நிலவென்றும்
தேகத்தில் மின்னும் பொன்னென்றும் கொஞ்சினாள்...
உனது செவ்விதழ்கள் சிந்தும் புன்னகையினை
தினம்பூக்கள் கடன் வாங்குதே என்றாள்......


உதிர்ந்து விழுந்தேன் அவள் மடியிலே
உதிராதப் புன்னகை அவள் முகத்திலே
உதிரங்க ளெல்லாம் என் நினைவிலே
உதித்து விட்டாள் இறைவியாய் என்நெஞ்சிலே......


தாயும் என்மடியில் சேயாக வேண்டும்
தாலாட்டு நாளும் நான் பாடி
அன்னைக்கு அன்னையாகி சேவைகள் செய்திட
இன்றுஓர் வரம் வேண்டும் கொடுப்பாயோ?......

எழுதியவர் : இதயம் விஜய் (22-Nov-16, 8:26 am)
Tanglish : or varam vENtum
பார்வை : 3687

மேலே