பிரிதலில் மெலிந்தது மனம்

காதல் தொற்றிய முன்னொருங் காலம்
கவிதைக் கொட்டிய எழிலருங் காலம்
இமைகள் மூடினேன் இருளை நாடினேன்
எண்ணம் விழித்தேன் எழுத்தை அழைத்தேன்
சிந்தைத் தட்டியது சிறப்பாய்க் கொட்டியது
சின்னாள் போக பல்நாள் நீண்டது
வன்னாள் ஆனது இன்னாளும் தீர்ந்தது
வெறுமை ஆள வெறுப்பும் சூழ
உவகைத் தொலைத்து உளத்தைப் பழித்து
தனிமையினை அணைக்கிறேன் வெஞ்சினத்தையே உடுக்கிறேன்!

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (22-Nov-16, 11:28 am)
பார்வை : 1855

மேலே