நுண்ணறிவு – Intelligence

அறிவியற் கதை

“ என்னடா உன் அப்பாவைப் போல புத்தியில்லாமல் பேசுகிறாய். எதையும் யோசித்து கதை.” இது என் அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் வசனம்.

என் அப்பாவின் குறைந்த புத்திசாலித்தனத்தை பற்றி என் அம்மாவுக்குத் தெரிந்திருந்தும் அவர் மேல ஒரு போதும் குறை சொல்லமாட்டாள். எப்படி இருந்தும் அவர், அவளின் கணவன் அல்லவா? என் அப்பாவின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுபவள் புத்திசாலியான என் அம்மா. எது நடக்கப் போகிறது அதை முன்கூட்டியே கணிக்கக் கூடியவள். வரலாற்றுத் துறையில முதலாம் வகுப்பில தேறிய பட்டதாரி. அவள். சில காலம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்தவள். ஈPழத்து வரலாறு என்ற நூலை எழுதியவள். உலக வரலாற்றில் நடந்த முக்கிய சம்பவங்கள் எந்த ஆண்டு, எந்த மாதம் நடந்தது என்பதை நினைவில் வைத்திருப்பவள். என் பெற்றோர் குடும்பத்தைப் போல் என் குடும்பமும் அமைந்து விட்டது.
நான் ஒரு சாதாரண வர்த்தகன். முதிசமாக எனக்கு வந்து சேர்ந்த செல்வமும், என் மனைவி சரஸ்வதி கொண்டு வந்த சீதனமும் சேர்ந்ததால் எங்கள் குடும்பத்தில சௌகரியத்துக்கு குறைவில்லாத வாழ்வுக்கு பெரிதும் உதவியது. என் குடும்பத்தில் சில வருடங்களுக்குப் பின் பிறந்தவன் தயாநிதி. ஒரே பிள்ளை என்ற படியால் அவன் கேட்டதைக் கொடுத்தோம். அவனோடு விளையாட ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்தினோம்.
அன்று என் மனைவி சரஸ்வதி என்றுமில்லாதவாறு கவலையோடு ஹாலில் எனக்காக காத்திருந்தாள்.
“ என்ன சரஸ் ஒருநாளும் இpல்லாதவாறு எல்லா வசதிகளும் இருநதும் எதற்காக கவலையாடு இருக்குறீர்? நீர் வேலை செய்யும் இடத்தில் எதும் பிரச்சனையா”? நான் என் மனைவியைக் கேட்டேன்.
“ சிவா எல்லா வசதிகளும் செல்வமும் இருந்தால் மட்டும் போதுமா, எங்கள் மகன் தயாநிதி; படித்து கல்விமானாக வேண்டாமா?” அவளிடமிருந்து நான் எதிர்பாராத பதில் வந்தது. அவளுக்கு தன் மகன் தன்னைப்போல படித்து பட்டதாரியாக வேண்டும் என்ற ஆசை இருப்பது எனக்குத் தெரியும்.
சரஸ்வதி மற்ற பெண்களைப் போல் இல்லாமல் சற்று மாறுபட்டவள். பெண்ணுரிமைக்காக போராடுபவள். அதனாலோ என்னவோ என்னை அத்தான்இ இஞ்சாருங்கோ அல்லது அப்பா என்று அழைக்காமல், சிவச்சநதரனான என்னை சுருக்கமாக சிவா என்று, திருமணமான முதல் கொண்டே அழைக்கத் தொடங்கினாள். கணவனை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் எங்கள் இனத்தவர்களிடையே இல்லாத பழக்கம். என் பெற்றோரும் தங்கள் மருமகள் என்னை சிவா என்ற அழைப்பதை விரும்பவில்லை என எனக்குத் தெரியும். ஆனால் நான் என் மனைவி என்னை அப்படி அழைத்ததை எதிர்க்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவளின் புத்திசாலிதனமும், அவள் வகித்த பதவியும். எனது ஏற்றுமதி பிஸ்னஸ் பிரபல்யமாக வளர்வதற்கு அவளே முக்கிய காணகர்த்தா. பிஸ்னசின் வரவு செலவுத் திட்டத்தை வருடா வருடம் தயாரித்து, மேற்பார்ப்பதும் அவளே. எனது புத்திசாலி தனத்துக்கும் அவளது நுண்ணறிவுககும் இடைவெளி அதிகம். என் தந்தை என் அம்மாவினதும் அவரின் ஊழியரகளின் புத்திசாலிதனத்தை நம்பியே வரத்தகம் செய்து, சொத்து சேர்த்தவர். அவரை புத்தசாலி என்று சொல்லமுடியாது. எனது மந்தக குணத்தைப் புரிந்தோ என்னவோ எனக்கு வரும் மனைவி புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று கணித பட்டதாரியான சரஸ்வதியை, படித்த குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுத்தார்.
சரஸ்வதியின் குடும்பத்தில் எல்லோரும் படித்து பட்டம் பெற்றவர்கள். சரஸ்வதியின் தந்தை அரச வருமான வரி இலாக்காவில் பிரதம கணக்காளராக இருந்து ரிட்டடையரானவர். தாய் ஒரு விஞ்ஞான ஆசிரியை. தமையன் பௌதிக பேராசிரியர். தங்கை சாவித்திரி ஒரு மூளை சம்டபநதப்பட்ட வியாதிகளுககுக கண்சல்டன் டாக்டர். சரஸ்வதியின் தம்பி சந்திரன் மாநிலத்தில் செஸ்போட்டியில் முதலாவதாக வந்தவன். பதின்ரெண்டாம் வகுப்பு படிக்கும் அவன் படிப்பில் கெட்டிக்காரன். பொறியியலாலனாக வரவேண்டும் என்பது அவன் நோக்கம். சரஸ்வதியின் பெற்றோர் குடும்பத்தோடு, என் பெற்றோர் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தலை குனியும் நிலை என் பரம்பரைக்கு இருந்தது, செல்வம் இருந்தும் புத்திசாலித்தனம்; எனது தந்தையிடமும் , பாட்டனாரிடமும் அவ்வளவுக்கு இருந்ததில்லை என்று அம்மா எனக்குச் சொல்வதுண்டு. அநத மந்தக்குணம் மரபணு வழிவந்ததாக இருந்திருக்கலாம். அந்த தாழ்வு மனப்பான்மையோடு வளர்ந்த என் முன்னேறத்துக்கு, துணைபோனவள் மிக புத்திசாலியான என் மனைவி சரஸ்வதி என்பது எனக்குத் தெரியும்.
ஒரு பிரபல முதலீட்டு நிறுவனத்தில கணக்கியலில் பல பட்டங்கள் பெற்றதால், பிரதம கணக்காளராக அவள் வேலை செய்தாள். அவளது புத்திசாலிதனத்தால் “ஸ்மார்ட் இன்வெஸ்டர்’” என்ற அந்த நிறுவனம் வெகு விரைவாக வளர்ந்து, வணிகத்தில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நிறுவனங்களில்; மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நிறுவனத்தில் முதலீடு செயத பங்குதாரர்கள் அவள் திறமையைக் கண்டு அவளை நிறுவனத்தின் உபதலைவராக நியமித்தனர். அது எனக்கும் என் பெற்றோருக்கும் பெருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பது அவளே. அதுவும் என்னை பெயர் சொல்லி அவள் அழைப்பதை என் பெற்றோர் எதிர்க்காதற்கு ஒரு முக்கிய காரணம். நானும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
தன்னைப் போல் தன் மகனும் புத்திசாலியாக வளர வேண்டும்; என்பது சரஸ்வதியின்; எதிர்பார்ப்பில்; தவறில்லை. அவனுக்கு; மந்தக் குணம் என்று தெரிந்தபடியால், அவளுக்கு தன் மகன் தயாநிதி என்னைப் போல் ஆகிவிடுவானோ என்ற பயம் இருந்து வந்தது.
தயாநிதியின் ஸ்கூல் ரிப்போர்ட் சரஸ்வதியின் கையில் இருந்ததை கண்டேன். எனக்கு ஓரளவுக்கு பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டது.
“என்ன சரஸ்வதி எப்படி தாயவின் ஸ்கூல் ரிப்போர்ட் இருக்குது”? நான் நேரடியாக அவளைக் கேட்டேன்.
“அதை ஏன் கேக்கறியல் சிவா. எல்லாப் பாடங்களிலும் நாற்பது மார்க்சுக்கு குறைவாகவே தாயா எடுத்திருக்கிறான். கணகில் இருபது, சயன்சில் இருபத்தைந்து, தமிழுக்கு முபத்திரண்டு. ஆங்கலத்துக்கு முப்பது. கிலாஸ் டீச்சர் எங்களை அவசியம் தன்னை வந்து சந்திக்கச் சொல்லி; நோட் அனுப்பியிருக்கிறா”, கவலையொடு சரஸ்வதி சொன்னாள்.
“ அப்படியா?. தயாவைச் சொல்லி குற்றமில்லை. பாவம் அவனால் முடிந்தது அவ்வளவு தான்.” நான் என் மகனுக்காகப் பரிந்து சொன்னேன்.
“உங்களுக்க தெரியுமா பரீட்சைக்கு ஒரு கிழமைக்கு முதல் அவனுக்கு நான் வைத்த ஐகியூ டெஸ்டில் அவன் எடுத்த புள்ளிகள் 50. இது அவனது புத்திசாலித்தனத்தின் அடி மட்டமான நிலையை காட்டுகிறது. என் நிறுவனத்தில் எனனை வேலைக்கு இன்டரவியூ செய்த போது அவர்கள் வைத்த ஐகியூ டெஸ்டில் எனக்குக் கிடைத்தது 155 புள்ளிகள். புpரபல விஞ்ஞானி அயன்ஸ்டைனின் ஐகியூ 170. இது நூற்றுக்கு ஒரு விகத்திலும் குறைந்தவர்களுக்கு மட்டுமே இருக்கும்”
“ சரஸ் உம்மோடு உம் மகனை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டாம். எல்லோரின் திறமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவனுக்கு சராசரி ஐகியூ லெவலான 100 இருந்தாலே போதுமானது”இ நான் மகனுக்காக பரிந்து சொன்னேன்.
“ சிவா நான் தயாநிதியின் நுண்ணறிவைப் பற்றி கொண்சல்டன் டாக்டராக இருக்கும் என் தங்கை சாவித்திரியிடம் ஆலோசனை கேட்டேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவள் சொன்னாளஇ; இது மரபணு தொடவுள்ள பிரச்சனையாக இருக்கலாம். அப்படி இருநதால் இப்போது செல் திரப்பி செய்து நிலமையை சிர்திருத்த வாயப்புண்டு;. அதைவிட பல வழிகளுண்டாம். மூளை ஒப்பிரேசன் செய்வதை தவிர்க்கட்டாம்..”
“ பழுதடைநத மரபணுக்களை புதிய நுண்ணறிவு திறன் அதிகமாயுள்ள ஒருவரின் மரபணுக்களினால் மாற்றினால் நுண்ணிறவு அதிகரிக்;கலாம் என்பதற்கான பரிசோதனைகள் செய்து வெற்றியும் கண்டார்களாம்” அந்த மரபணு மாற்று சிகிச்சை அமெரிக்காவில் செய்து வெற்றி கண்டிருக்கிறார்களாம். அதற்கு பணம் அதிகம் செலவாகும்: நீங்கள் என் நினைக்கிறீரகள் சிவா”, சரஸ்வதி என் பதிலை எதிர்பார்த்தாள்.
“ இங்கைபாரும் சரஸ், இது போன்ற முக்கிய முடிவுகளை நீ எடுப்பது வழக்கம். மரபணுமாற்றத்தால் தயாவின் நுண்ணறிவில் முன்னேற்றம் இருக்குமாயின் எனக்கும் அந்த சிகிச்சையை தயாவுக்கு செய்வதறகு சம்மதம்”;. இதைப்பறிறி நான் என் பெற்றோரோடு பேசியபோது, அம்மாவுக்கு அந்த சிகிச்சை செய்வது சரியெனப் பட்டது” என்றேன் நான ;
“எனது பேரன் ஒரு சாணக்கியனாக வரவேண்டும் என்று நான் எதிரபாரக்கவில்லை. ஓரளவுக்கு சராசரி நுண்ணறி ஈவு இருந்தால் அதுவே போதும்.” என்றாள் அம்மா.
ழூழூழூழூழூ
பல ஆயிரம் டொலரகள் செலவு செய்து, மரபணு திரபி சிகிசசையை தயாவுக்கு செய்வதற்கு நியூயோரக்கில் உள்ள பிரபல்யமான மவுண்ட் சினாய் வைத்தியசாலைக்கு சரஸ்;வதி அவனை அழைத்துச் சென்றாள். நானும் கூடவே சென்றேன்.
மவுணட் சினாய் வைத்திய சாலையில் பரிசோதனை செய்து பார்த்தபோது தயாவின் உயிரணுக்கள் முழுவதையும் மாற்றத் தேவையில்லை என்பதை அறிந்தார்கள். மரபணு சிகிச்சையை பாதிக்கபட்ட உயிரணுக்கள் திருத்தும் முயற்சியில டாகடர்கள் ஈடுபட்டனர். . நுண்ணறிவு கூடிய ஒருவரின் உயிரணுக்களை பாவித்து சிகிச்சை அளிக்பட்டது. சிகிச்சைக்கு பின் ஒரு மாதம் தயாநிதியில் ஏற்பட்ட மாற்றத்தை ஐகியூ டெஸ்ட்டுகள் செய்தபோது றுண்ணறிவு ஈவானது 110 க்கு உயர்ந்ததை டாகடர்களால் அவதானிகக் கூடியதாக இருந்தது. நல்லவேளை செய்த மறபணு சிகிச்சையினால் எதிர்பாரத்த மாற்றம் ஏற்பட்டது டாகடர்களுக்கு மகிழச்சியைக் கொடுத்தது. இச்சிச்சை எதிர்பாரத விளைவைக் கொடுகாதிருந்தால், அடுத்ததாக மூளை சிகிச்சை செய்யதிருக்க வேண்டிய நிலை ஏற்பட்;டிகலாம். ஆதனால்
உயிருக்கு ஆபத்தும் ஏறபட்டிருக்கலாம்.

சிகிசசை நடந்து ஊர் திரும்பிய பல மாதங்களுக்கு பின் தாயநிதியன் படிப்பில் மாற்த்தைக்கண்டு சரஸ்வதி மகழ்ச்சியடைந்தாள். வகுப்புpல் எல்லாப்பாடஙகளிலும் எழுபதுக்கு மேல் புள்ளிகள் பெற்று மூன்றாம் மாணவன் ஆனான்.. தான எதிர்பார்த்த நுண்ணறிவு உள்ளவானாக தயா வளர்வதைக் கண்டு நானும் சரஸ்வதியும,; என் பெற்றோரும், சரஸ்வதியின் பெற்றோரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.

*******

.

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (23-Nov-16, 9:43 am)
பார்வை : 299

மேலே