வெள்ளி கிழமை

வெள்ளிக் கிழமை என்றாலே ஒரு வித பயபக்தி மனதுக்குள் வந்து ஒட்டிக்கொள்கிறது .....
அதிகாலை ஏழு மணிக்கு நாம் எந்திரிக்கும் முன்பே வீட்டில் சுப்ரபாதம் ஓடிக் கொண்டிருக்கும் .....
நம் உறக்கத்தை கலைக்கும் விதமாக பத்தி மனம் படையெடுக்கும் .....
வெள்ளி கிழமை என்றால் காலையில் இட்லியும் தேங்காய் சட்னியும் தான் ,,,,
பரபரப்பாக இயங்கும் நாள் என்றால் அது வெள்ளி மட்டுமே
தலைக்கு குளித்து விட்டு தண்ணீர் சொட்ட சொட்ட அள்ளி முடிந்து
சாமியும் கும்பிட்டு விட்டு இரண்டு இட்லியை வாயில் போட்டு
ஒரு சிறு மல்லிகை பூவை தலை முடி இடுக்கில் சொருகி
அவதி அவதியாக அலுவலகம் செல்ல வேண்டும் ....
வழியெங்கும் இருக்கும் அம்மன்களையெல்லாம் பேருந்தில் போகும் போது
கன்னத்தில் போட்டு கும்பிட்டு விட்டு பேருந்து பயணத்திலே பக்தியை கொட்டி விடுகிறோம்
வெள்ளி கிழமை என்றாலே அலுவலகத்தில் அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பார்
காரணம் அடுத்து சனி ஞாயிறு, விடுமுறை என்பதால் ஒரு வித சந்தோஷம்
பக்கத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் காலையில் இருந்து பூஜை நடக்கும்
சுண்டல் மனமும் பொங்கல் மனமும் ஆளையே கோவிலுக்கு இழுக்கும்
சிலர் சாமி கும்பிட , சிலர் பொங்கல் வாங்க என அனைவரும் போவோம்
நான் உச்ச பட்ச சிவன் , முருகனின் பக்தை.....
வியாழன் வியாழன் தட்சனாமூர்த்தி விளக்கு , முருகனுக்கு துர்க்கைக்கு விளக்கு
என வாரம் முழுவதும் சாமியே துதி என்றிருந்தாலும் வெள்ளி கிழமைகளில்
கோபுரம் பார்த்து மனதில் வேண்டுதல்களை நினைத்துக் கொண்டு கோவிலை சுற்றி வரும்போது
மனதே நிறைந்து காணப்படும் .....
மாலையில் வீட்டிற்கு போனதும் அருகில் உள்ள அம்மன் கோவில் இரவு உறங்கும் போது
ஒரு முறை பூசை என வெள்ளி கிழமையே
அழகாக கடவுளால் நிறைந்து காணப்படும் ...........

எழுதியவர் : க.நாகராணி (25-Nov-16, 12:59 pm)
சேர்த்தது : நாகராணி
Tanglish : velli kizamai
பார்வை : 712

மேலே