ஒரு ஊர்ல இளம் சாதனையாளன்

கன்னம்மாபுரம் கிராமத்தில் நீலன் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இருந்தான் அவனக்கு படிப்பு என்பதே
சுத்தமாக வராது ஆனால் அறிவியல் தொடர்பான விஷயம் கண்டுபிடிப்பதில் புத்திசாலியாக இருப்பான்
அப்பா மாரிமுத்து ஒரு விவசாயி ,நீலனுக்கு அம்மா கிடையாது அவன் சிறுவனாக இருக்கும்போதே அவனுடைய
அம்மா இறந்துவிட்டார்.அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் , அவனுடைய அப்பா அவன் படிக்காமல் இருப்பதை பற்றி எதுவும் கேட்பதில்லை, ஒரு நாள் நீலன் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் நீலனுடைய
அப்பாவை பள்ளிக்கு வரும்படி அழைத்து இருந்தார்.அவனுடைய அப்பா பள்ளிக்கு சென்றதும் தலைமையாசிரியர் அவரை அமர சொல்லிவிட்டு உங்க பையன் சரியாக படிப்பதில்லை என்று சொல்லிவிட்டு
அவனுடைய மதிப்பெண்களை எடுத்து அவரிடம் காட்டுகிறார் .இவன் சரியாக படிக்கமாட்டான் என்று சொல்லிவிட்டு அவனை வேறு பள்ளியில் சேர்க்குமாறு சான்றிதழை அப்பாவிடம் கொடுத்துவிடுகிறார்.
நீலனுடைய அப்பா எவ்வளது கூறியும் பள்ளி நிர்வாகம் சான்றிதழை அளித்துவிட்டது.

வேறு வலி இன்றி அவன் ஒரு கடையில் வேலை பார்க்கும் நிலை ஏற்ப்பட்டது .வேலை பார்க்கும் போது
தினசரி பத்திரிகைகளை படிப்பது வழக்கமாக இருந்தது.பத்திரிகையில் பாலூத்தின் பைகளை ஒழிப்பது தொடர்பான போட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த ஆராய்ச்சியை நீலன் எழுதி அனுப்பி வைத்தான்.
அவன் எழுதிய கருத்து புகழ் பெற்றதாக மாறியது.தமிழ்நாடு அரசு அவனுக்கு இளம் சாதனையாளன் விருதையும்
அளித்தது.

எழுதியவர் : தூ.நீலகண்டன் (26-Nov-16, 10:51 am)
பார்வை : 424

மேலே