விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி நீயிங்கு வருவாயா?...
மண்ணைத் தொட்டு வரங்கள் தருவாயா?...
வண்ண மிழந்து தவிக்கிறது வாழ்க்கை...
எண்ண மெங்கும் உன்றன் ஞாபகமே......


கண்ணில் இமைகள் திறந்தே இருக்கிறது...
மண்ணில் விதைகள் உறங்கியே கிடக்கிறது...
பெண்ணின் மனதின் ஆழம் அறிவேன்...
மண்ணில் மழைவரும் காலம் அறியேன்......


காற்றில் மேகங்கள் கலைந்து போவதால்
சேற்றின் ஈரம் காய்ந்து போகிறது...
ஆற்று நீரும் வற்றி விட்டது...
மாற்றம் ஒன்றை மனமும் தேடுகிறது......


விளையும் நிலங்கள் களர்நிலமாய் ஆகிறது...
விவசாயின் நெஞ்சம் புழுவாகத் துடிக்கிறது...
விண்ணின் மழையே விரைந்து வந்திடு...
விருட்சமாய் உயிரற்று மனிதன் சாய்கிறான்......


இயற்கையின் முகங்கள் சுருங்கி விட்டது...
இமயத்தின் தென்றல் வெப்பம் தருகின்றது...
இன்னல்கள் தீர்த்திட வந்திடு மழையே...
இதயத்தைக் குளிர்ந்திட செய்திடு மழையே......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Nov-16, 7:34 am)
பார்வை : 931

மேலே