வற்றாத அன்பு

அன்னையின் மடியில் தன்னை மறந்தேன்...
அன்னச் சிறகில் விண்ணை வரைந்தேன்...
சின்ன பெண்ணாய் நானும் இருந்தேன்...
தோகை விரித்து ஆடி களித்தேன்......


இளமைப் பூத்து இதழ்கள் சிரித்தேன்...
இளம்பூவைத் தேடி வண்டும் வந்தது...
அன்னையின் மொழிகள் ஆத்திர மூட்டியது...
அவளை விட்டு விலகவும் நேர்ந்தது......


இளமையின் வாசம் எதுவரை வீசும்...
இளமயில் வாசம் அதுவரையே வீசியது...
ஊனைத் தின்று ஒதுங்கிப் போனது...
தாய்மானைத் நாடியே இளமான் வந்தது......


வாயில் நுழைந்த அமிழ்தம் கசந்தாலும்
தாயின் மொழிகள் கசப்பதில்லை உணர்ந்தேன்...
சேயின் நலனையே பெரிதும் நினைத்து
நோயில் படுத்தாலும் நோன்பு இருப்பவள்......


கற்றவள் கால்கள் தடுமாறிச் சென்றேன்...
பெற்றவள் எனக்கு வேலியாக நிற்கிறாள்...
வற்றாத அன்பில் வாழ்வை நனைத்து
கற்றேன் அவளிடம் தாய்மையின் கல்வி......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Nov-16, 7:54 am)
Tanglish : vatraatha anbu
பார்வை : 567

மேலே