ஒரு பக்கக் காதல் கதை பாகம் -14

அடுத்தநாள் காலை அவள் வரும் முன் அவன் வந்திருந்தான் ரெகார்டிங் தியேட்டர் அருகில்..அன்று மேகம் கூட சற்று விலகி வண்டிகளின் இடுப்பில் பட்டு வளைந்து நெளிந்து கொண்டிருந்தது ஆதவ கதிர்கள்..அதன் பிம்பங்கள் அவள்மேல் படர ..தங்கநிறத்தில் ஜொலித்தது அவளின் உருவம்..நடந்து வந்தாலும் மிதப்பதுபோல் தோன்றியது அவனுக்கு..காலக்கடிகாரம் சற்று வளைந்து கொடுக்கும் காதலுக்கென்பது உண்மையாகத்தான் இருக்கவேண்டுமென நினைத்தான்

அவன்: இன்னிக்கு ரொம்ப அழகா தெரியுற என் கண்ணுக்கு..கண்கொட்டாமல் பாக்கனும்போல இருக்கு ..பொய்யா இருந்தாலும் கொஞ்சம் கற்பனைகள் அழகுன்னு தோணுது

அவள்: கடைசியா சொன்னது மட்டும் உண்மை, கொஞ்சம் வளைஞ்சா வளச்சிட்டே இருப்பீங்களே..இந்த பனியெல்லாம் இங்க உருகாது..வேற பணி இருந்தா பாருங்க ..

இவள் சீண்டலை மிஞ்சியது அவனின் கைபேசி, எடுத்தான் மறுமுனையில் அவன் அம்மா

அம்மா: டேய் ஒரு issue escalate ஆயிடுச்சுடா..உன் மேனேஜர் மெயில் அனுப்பிருக்கார்..மதிய சாப்பாடு எங்க ?

அவன்: சேரி நா வரேன் சமாளி என துரிதமாக 23 நொடிகளில் வைத்தான்..வா சீக்கிரம் ...என அவளின் கைகளை கவ்வி இழுத்தான் ..

அவள்: எங்க வரசொல்ற..எனக்கு ரெகார்டிங் டைம் ...

அவன்: ஒரு அரைமணி நேரம் திரும்பி வந்து கார்த்திக்கை திட்டலாம் ..

அவள் தலை சாய்ப்பதுபோல் உணர்ந்து அவள் வண்டியின் பின் சீட்டில் அமர்ந்தான்

வண்டி அவன் கூறிய பாதையில் அதனின் முழுத்திறனை காண்பித்து கச்சிதமாக 2 மணி நேரத்தில் கந்தன்சாவடி வந்தடைந்தது


அவன்: அம்மா..லாகின் பண்ணித்தானே வெச்சிருக்க?

அம்மா: ஆமா டா..இது என்னமோ புது issueவா இருக்கு..db பேக்கப் எடுத்து வெச்சிட்டேன்..டிக்கெட் ரைஸ் பண்ணி லேட் ஆயிடுச்சுனு மேனேஜர் மெயில் அனுப்பிட்டாரு ..நம்ம டீல் படி மத்திய சாப்பாடு செய்யாம வெச்சுட்டு போயிடல்ல அதான் ..தப்பு தப்பா நடக்குது

அவள்: என்ன பேசுறீங்க ..என்ன டீல் ?

அவன்: அம்மா விளையாடற நேரமா இது ..சார்ஜ்ர் எங்க ?

அம்மா: அங்க சமையல் கட்டுல மிஸ்சி பக்கத்துல பாரு டா ..இவன் ஒரு வாரத்துக்கு என் வேலைய பாப்பான், நான் அவன் வேலைய பாக்கணும் இதான் டீல்

அவள்: எனக்கு ஒண்ணுமே புரியல ...கொஞ்சம் தண்ணி கொடுங்க மொதல்ல ...

அம்மா: பாத்தியாடா வந்தவங்களுக்கு ஒரு வாய் தண்ணி கூட கொடுக்கல 10 மார்க் மைனஸ் உனக்கு

அவன்: இப்ப நீ பண்ணுன தப்புக்கு 50 மார்க் மைனஸ் பண்ணட்டா ?

அம்மா: கொஞ்சம் ஏமாந்தவளா இருந்தா போதும் நல்ல ஏமாத்திடுவான் ..கேடி

அவள்: உண்மைதான் மா

அவன்: இந்த முதல்ல தண்ணிய குடி ..வந்தவொடனே அங்க என்ன சப்போர்ட் ...

தனது மடிக்கணினியை கையில் தூக்கிக்கொண்டு அங்குமிங்குமாய் ஓடினான் ...ஏதோ அவசர எழுத்துகள் தட்டிக்கொண்டே .

அம்மா: என்ன issue டா இது...நானும் stack overflow, forums, documentations எல்லாம் பாத்துட்டேன்..இந்த errorஓட பேஸ் வேற மாதிரி இருக்கு ..அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு..

அவன்: இருமா பேசிக்கிட்டே இருக்காத..பாக்கறேன்..நீ போய் பூஸ்ட் போடு..இதுக்கெல்லாம் பி.டெக் படிச்சவனால தான் [பண்ண முடியும்..

அவள்: டேய் டேய்..நடிக்காத..உன் வேலைய என் தலைல கட்டலாம்னு பாக்குறியா ?..சேரி இந்த ஒருதடவை போடறேன் ..உனக்கும் போடலாம்ல மா?..

அவன்: போடு போடு..இதெல்லாம் என்ன கேட்டுகிட்டு..

..ஏதுமறியாத குழந்தையாய் தலை அசைத்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (29-Nov-16, 8:24 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 374

மேலே