முயற்சி பலிக்காது - 1

இன்று எனக்கு விடுப்பு என்பதால் இன்று ஒருநாள் Cashless transaction ஐ முயன்று பார்க்கலாம் என முடிவு செய்தேன்.

தெருவில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி காலையிலேயே கீரைக்கட்டுகளை சுமந்து வந்த குரல் கேட்டதும் கீரை வாங்கலாம் என முடிவெடுத்தேன். கூப்பிட்டு விலை கேட்டதும் ஒரு கட்டு பத்து ரூபாய் என்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் Card swiping machine இல்லை.

Pay tm வசதிகூட வைத்திருக்கவேண்டும் என்ற பொருளாதார அறிவு இல்லை. எனவே அவரை அனுப்பிவிட்டேன். அதே கீரை பக்கத்து தெருவில் உள்ள Reliance fresh கடையில் உள்ளது. பாட்டி கொண்டு வந்த அளவுக்கு Fresh ஆக இல்லாவிடிலும் ஓரளவுக்கு சுமாராகவே இருந்தது. ஒரு கட்டு 20 ரூபாய் என்றனர். அவர்களிடம் Card payment வசதி இருந்தது. ஆனால் 20 ரூபாய்க்கு Card தேய்க்கமாட்டோம். குறைந்தது 200 ரூபாய்க்கு வாங்கினால் தான் Card வாங்குவோம் என்றனர். இது என்னடா சோதனை என்று அங்கிருந்து திரும்பினேன்.

வரும் வழியில் டீ குடிக்கலாம் என்றால் அவரிடமும் Card வசதி இல்லை. மணி 9 ஆனதும் ஒரு பெண்மணி நடத்தும் இட்லி கடைக்கு சென்றேன். ஐந்து இட்லி ஒரு வடை 30 ரூபாய் என்றார். ஆனால் அவரிடமும் Card வசதி இல்லை.

Doveton Cafe என்றொரு பெரிய ஓட்டல் உள்ளது. அவர்களிடம் சென்றால் நீங்கள் குறைந்தது 150 ரூபாய்க்கு சாப்பிட்டால் தான் Card வாங்குவோம் என்றனர். சரி தோசை மாவு வாங்கி வீட்டுக்கு போய் தோசை சுடலாம் என்று அந்த கடைக்கு போனால் மாவு பாக்கெட் 15 ரூபாய் தான். ஆனால் அவரிடம் Card வசதி இல்லை. ஒரு மணி நேரமாக வெயிலில் நடந்து சென்றது களைப்பாக இருந்ததால் ஒரு பெட்டி கடையில் பன்னிர் சோடா குடிக்கலாம் என்று போனால் அவரிடமும் Card வசதி இல்லை.

மிகுந்த பசி தான். இருந்தாலும் எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்படும்போது ஒரு நாள் சாப்பிடாவிட்டால் என்ன, அதுவுமில்லாமல் பிரதமரே சாப்பிடாமல் தான் இருக்கிறார். நாம் சாப்பிடலாமா என்று மனதில் நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் என் மகள் பிஸ்கெட் வேண்டுமென கேட்டாள். அவளை கடைக்கு கூட்டிப்போய் என்னிடமுள்ள 50 ரூபாய்த் தாளை கொடுத்து என் Cashless சங்கல்பத்தை முடித்துக்கொண்டேன்..! முழுதாக மூன்று மணி நேரம் கூட என்னால் என் விரதத்தை காப்பாற்ற முடியவில்லை.

எனது சங்கல்பம் முக்கியமானது தான். ஆனால் எல்லாவற்றையும் விட என் குழந்தை எனக்கு முக்கியமானவள்..!

#முகநூலில்_படித்தது

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Nov-16, 7:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 217

மேலே