பெண் மயில்

அவளைக் கண்டபின்புதான்
அர்த்தம் புரிந்தது
ஏன் பெண்கள் ஆண்களைவிட
சோர்வாக உள்ளனர் என்று

ஐம்பது கிலோ அழகை
அனுதினம் சுமப்பதால்தான் என்று

பொன்னைப் பார்த்துப் பெண்
வாங்குகின்றாள் நகைக்கடையில்
பெண்ணைப் பார்த்துப் பொன்
ஏங்குகின்றது அவள் நகைக்கையில்

அனைவரும் துயில் எழ
சேவல் கூவும்
இவள் துயில் எழமட்டும்
குயில் கூவுகின்றது

பெண்மயிலுக்காகத் தோகைவிரிக்கும்
ஆண்மையிலெல்லாம் இவள்
பெண்மையைக் கண்டுமல்லவா
தோகைவிரிக்கின்றது

பன்னிரண்டு வருடத்திற்கு
ஒருமுறை பூக்கும்
குறிஞ்சிப்பூ இவள்
கண்ணிரண்டைப் பார்த்ததும்
பூக்கின்றது

கங்கை நதிக்கரையில்
வளரும் நாணலைவிட
இந்த மங்கை மதிக்கரையில்
மலரும் நாணம் அழகு

இவள் நரகத்தில்
இருந்தால் நரகம் கூட
நகரம் ஆகின்றது

இவள் கைப்பட்டால்
சீரகம் கூட சிகரம் ஆகின்றது

அழகிப்போட்டியில் அனைவரும்
நடந்து செல்ல இவள்மட்டும்
பறந்து சென்றாள்
ஏனென்றால் இவள் தேவதையல்லவா

எழுதியவர் : குமார் (2-Dec-16, 9:15 pm)
பார்வை : 1396

மேலே