A for அம்மாதான்

*இறுதியில் மரணம்*
*வென்றேவிட்டது*.......

ஏறக்குறை இரண்டரை
மாதங்கள் ஒரு மிகச்
சிறந்த மருத்துவமனையில்
அந்தந்த நோய்களின்
சிறப்பு மருத்துவர்களும்...
செயல் இழந்த உறுப்புகளைக்கூட...
செயல்பட வைத்துவிடும்
ரிச்சர்ட்பீலே என்ற
லண்டன் மருத்துவரும்...
இணைந்த மிகப்பெரிய
மிகத்திறமை வாய்ந்த
மருத்துவ உலகமே
திரண்டு மருத்துவ உலகின் அதிகபட்ச
மருத்துவத்தை...
*ராஜ வைத்தியத்தை*
செய்து...இறுதிவரை
முயன்றனர்...ஆனால்...
ஆனால்....இறுதியில்...
*மரணம் வென்றே விட்டது*......

மாண்புமிகு ஜெயலலிதா
அவர்கள்...சாதாரண
குடும்பத்தில்...
கர்நாடகாவில்...பிறந்து
இரண்டு வயதில்....
தந்தையை இழந்து...
முடிந்தவரை நல்லபள்ளியில் படித்து
இயற்கையாகவே
தன் சுய திறமையால்..
ஒரு அறிவாளியாகவே
பரிணமித்தார்...

ஒரு வெற்றியான
நடிகையாக வலம்வந்து
நூற்றுக்கு மேற்பட்ட
குறிப்பாக அதிகம்
வெள்ளிவிழா கொண்டாடிய படங்களில்
ஏறக்குறைய ஐந்து
மொழிகளில்...படங்களில்
நடித்து..தங்கத் தாரையாக
மின்னியவர்....

ஃபோயஸ் கார்டனின்
வேதா இல்லத்தை
ஒரு இரும்புக்கோட்டையாக
கட்டமைத்து.....
எல்லோரையும்...
ஓயாமல் பேசவைத்தவர்...

எம்.ஜி.ஆர் அவர்கள்
மரணித்தபோது..அவரின்
உடல் ஏற்றிய வண்டியில்
இருந்து தள்ளிவிடப்பட்டு
இறக்கிவிடப்பட்டவர்...

ஆனால் அதன் பிறகு
நடந்த அரசியல்
நிகழ்வுகளிலிருந்து..
அவரை யாராலும்
இறக்கிவி முடியவில்லை..

ஒரு பாராளுமன்ற
உறுப்பினராக....
சட்டமன்ற உறுப்பினராக..
எந்த பெரிய பின்புலமோ..
அரசியல் அனுபவமோ
இல்லாமல் முதலமைச்சர்
நாற்காலியில் அமர்ந்து
எதிர் அரசியல் செய்தவர்
களுக்கு சிம்ம சொப்பனமாக....
விளங்கியவர்...

69 சதவீத இட ஒதுக்கீட்டை
தமிழகத்தில் அமல்படுத்தி
சமூக புரட்சி செய்தவர்...

இன்னும் எல்லா வித
ஜாதி மதங்களைப்..
பின்பற்றுபவர்களுக்கும்
அவரவர்கள் பயன் பெறும்
வகையில் ஏராளமான
நன்மைகளை......
திட்டங்களை.....
செயல்படுத்தியவர்...

அவரது அரசியல் வாழ்வில்
தடுமாற்றங்கள் வந்த
போதும்...துள்ளிக்குதித்து
மீண்டும் அரசியல்
உச்சங்களை தொட்டவர்...

ஆணாதிக்க..அராஜக
அரசியல் உலகில்...
எந்த பெரிய பின்புலமும்
இல்லாமல் ...........
*மக்களின் ஏகோபித்த*
*ஆதரவு மட்டுமே*..
அவரின் வெற்றிப்படிக்கட்டுக்கள்...

சில நூல்களை எழுதிய
எழுத்தாளராகவும்...
நல்ல சிந்தனையாளராகவும்...
தமிழ்...ஆங்கிலம்...
கன்னடம்...தெலுங்கு..
மலையாளம்...ஹிந்தி
என ஆறு மொழிகளிலும்
சரளமாக பேசும் திறன்
படைத்தவர்...

தன்னை மிகச்சிறந்த
ஆளுமையாக முன்னிறுத்தி...தனது
அரசியல் எதிரிகளை
திக்குமுக்காட வைத்து...
தனது தொண்டர்களின்
இதயத்தில் வைத்து
*அம்மா....அம்மா* என்று
அனுதினமும் உச்சரித்து
வணங்குகிற அவர்களின்
இதய தெய்வமாக
ஆகிப்போனது....
தொண்டர்களின்...
இதயத்தில் நிரந்தரமாக
வாழ்வார் என்பதும்
ஒரு மகத்தான சாதனைதான்...

இறதியில்...மீண்டும்...
மீண்டும்...முதல்வர் ஆகி
மரணிக்கிறபோது...
டில்லியின் இருஅவைகளிலும்...
ஏறக்குறை ஐம்பது
எம்பிகளோடும்...
தமிழக சட்டமன்றத்தில்..
பெரும் பாண்மையோடும்..
ஆட்சி புரிந்து இறுதியில்
தன் மரணப்பயணத்தை
துவங்கி விட்டார்...

அவரைப் பிடித்தவர்கள்
*அம்மா...அம்மா*..என்று
கதறவும்...அவரை
வெறுத்தவர்களின்
நெஞ்சில் கூட...ஏதோ
இனம் புரியாத...
வெற்றிடத்தையும்...
உருவாக்கியும்...
மறைந்திருக்கிற....
இன்றைக்கு ...
*முன்னாள் முதல்வர்*
ஆகிவிட்ட...
புரட்சித் தலைவி....
ஆற்றல் மிகு....
*ஜெ.ஜெயலலிதா*...
அவர்களுக்கு...
எனது இதயத்தின்...
ஆழத்திலிருந்து...
அஞ்சலியை...
செலுத்துகிறேன்.....
ஆழ்ந்த வருத்தங்களுடன்...

எழுதியவர் : முகநூல் (6-Dec-16, 9:50 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 502

சிறந்த கட்டுரைகள்

மேலே