J for ஜெயலலிதா

நீ ஒரு புதுமை பெண்தான்...
இல்லையில்லை..
புரட்சி பெண்தான்..
இல்லையில்லை...
புரட்சி பெண்களுக்கெல்லாம்
தலைவிதான்...
புரட்சி தலைவி..!

செய்திகள் அடித்து கொண்டே இருந்தது...
நீ அதை அழித்து கொண்டே
இருந்தாய்...

உதாசீனம் செய்ததில் நீ
உயிர்த்தெழுந்தாய்... பின்
உதாசீனம் செய்தே
உச்சம் தொட்டாய்..!

உடன்பிறவா உறவு
உன்னிழலாய் தொடர்ந்தாலும்
உள்ளபடி அரசாட்சியே உன்மூச்சாய் கொண்டிருந்தாய்..

நீ எனக்கு தலைவரில்லை
நானுனக்கு தொண்டனில்லை..
என்றாலும் உன்மரணம்
எம்நெஞ்சை வாட்டுகிறது...

பெண்ணாக பிறந்தாலும்
பெருந்துணிச்சல் பெற்றிருந்தாய்..
பிடிவாதம் மட்டும் ஏனோ
பிடிதளர்த்தியதே இல்லை...

இரும்புமனுசியாய் பேரெடுத்தாலும்
அம்மாயென்றே பேருனக்கு..
ஆட்சி கட்சி இரண்டிலுமே
ஆளுமை திறனே முதலுனக்கு..

தன்னந்தனி பெண்ணாகி
தொடங்கியதுன் போராட்டம்..
மரணத்தோடும்போராடினாய் தன்னந்தனியே தனியறையில்..

அகிலம் முழுமையாண்டாலும்
ஆண்டவன் நியதி மாறிடுமோ..
மனிதபிறப்பில் மரணமுண்டு
மனதில் நினைப்போம் வாழ்வுமுண்டு..!

முதல்வரின் இழப்பால் இதயம் கனத்து இரங்கல் பாடும் தமிழர்களோடு நானும் ஒருவனாய்...

குமரிபையன்

எழுதியவர் : குமரி பையன் (6-Dec-16, 10:28 am)
பார்வை : 204

மேலே