தமிழக அம்மாவுக்கு கவிதாஞ்சலி

அம்மா...
நீ மிகப்பெரிய இழப்பு ,
தமிழகத்திற்கு மட்டுமல்ல ..
பெண்ணினதிற்கே !!!

"கோ" வாகி கோலோச்சிய
கோமளவல்லியே ..
இன்று நீ இல்லை
ஆம் .,
எங்களோடு நீ இல்லை
இனி நாங்கள் அதை
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
கனத்த இதயத்தோடு ...

ஆனால்..
எங்களைக் காட்டிலும்
எதிரியின் மனமே
ஒப்புக்கொள்ளத் தயங்கியது
இச்சூழலை...

பெண் சிங்கமாய்
கம்பீர கர்ஜனையாய்
"ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்.. " எனும்
உன்குரல் இனி எங்கள் காதுகளில்
ஒலிக்கப்போவதில்லை..
வெறும் வெற்றிடமாகிப்போனது
உன் இடம்..

மீண்டு வருவாய் என
விழித்துக் காத்திருந்த வேளையில்
மீளாத் துயில் கொண்டு
விழி கசியச் செய்தாய் எம்மை...

உன்னை தூற்றியவர் தொண்டையும்
அடைபட்டுப் போனது அன்று ..
நாடே சற்று நடுங்கித்தான் போனது
இச்செய்தியால் ...

"மக்களால் நான்
மக்களுக்காக நான்.." - இனி
எங்களுக்கு யார் கொடுப்பர்
இந்த உத்தரவாதத்தை ...

சாவும் உன்னை சாமானியமாய்
வெல்ல முடியவில்லை தாயே ..
அதுவும் உன்னிடம்
போராடித்தான் பார்த்தது
75 நாட்களாய் !!!

இறப்பிலும் வாடா
உன் முகம் கண்டு
வாடியது இவ்வுலகே ...

மீளாத் துயில் கொண்டு
எங்களை ஆறாத் துயரில்
ஆழ்த்திவிட்டாயே அம்மா..
இத்துனை மக்களின் கூக்குரலும்
அந்த மகேஸ்வரன் காதில் விழவில்லையே ...?

மாண்டுவிட்டாய் !!
ஆம்..மாண்டே போய்விட்டாய் !!!
இனி நீ வரப்போவதில்லை ..
ஆனால்,
மக்களை ஆட்கொண்டுவிட்டாய் ..
இனிவரும் சந்ததிக்கு
பெண்மையின் இலக்கணமானாய் நீ ...

உன் இழப்பின் வலிமை தெரியும்
தருணங்கள் இதோ ...

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில்
ஆண்மை நிறைந்த பெண்மையாய்..

மாபெரும் சபையில்
மான பங்கப்படுத்தப்பட்ட நிலையிலும்
வீறுகொண்ட வேங்கையாய்..

துவளும் பெண்ணிற்கெல்லாம்
துணிச்சல் மிக்க தூண்டுகோலாய்..

பெண்ணை கீழ்தரமாய்
பார்க்கும் சமுதாயத்தில்
எப்பேர்ப்பட்ட ஆண்மகனும்
உன்னை சம எதிரியாய்
பார்க்கச் செய்த திறத்தால்..

சரிவுகள் அனைத்தையும்
சரித்திரம் ஆக்கிய சாணக்யனாய்..

எவர்க்கும் சிம்ம சொப்பனமாய்..

ஆம் .,
உனக்கு நிகராய்,
ஏன் !!
உன்னை போல கூட
இனியொரு மனுஷி
கிடைக்கப்போவதில்லை இங்கு...

ஆனால் இனி..
உன்னால் விதைக்கப்பட்ட விதைகள்
விருட்சமாய் வளர்ந்து நிற்கும்..
ஆதிக்கவான் அல்ல
வெறும் பாலின மாற்றமே ஆண் - எனும்
உன் வீர கர்ஜனை
நிஜமாகும் விரைவில்...

போதும் தாயே ...!!
இந்த போலி உலகில்
பொய் புரட்டு நிறைந்த கயவர்களிடையே உழன்றது..
இனியாவது
உனக்காக
நிம்மதியாய் துயில் கொள் .,,,
கோடான கோடி மக்களின்
தூய மனதில் !!!!

**********************************************
தாரணி தேவி

எழுதியவர் : தாரணி தேவி (7-Dec-16, 4:08 pm)
சேர்த்தது : தாரணி தேவி
பார்வை : 109

மேலே