நகைச்சுவை- ராமு-சோமு உரையாடல் -சிந்திக்க, சிரிக்க

ராமு-சோமு உரையாடல்
---------------------------------------------

சோமு : அண்ணே, ராமு அண்ணே , அந்தக்காலத்தில்
நாட்டுக்கு துரோகம் செய்வர்களுக்கு
என்ன தண்டனைத்தருவங்க ?


ராமு : ஏண்டா சோமு இப்படி திடு திடுன்னு ஒரு கேள்வி
மனசுல ஏதாச்சும் நினைச்சியா ?

சோமு : அண்ணே பேப்பர் ல இப்போல்லாம் படிச்சா
கள்ள நோட்டு அடிக்கறவங்க, கருப்பு பணம்
பதுக்கரவங்க அதுவும் ஆயிரம், லட்சம் கோடின்னு
கணக்குல படுக்கறவங்கள பத்தி தான் வருது
இந்த பணத்துல நாட்டையே சில வருடங்கள்
நடத்தலாமே அண்ணே; இப்படி நாட்டுக்கு தீங்கு செய்வார்களா
பெரும் துரோகிகள் தானே அண்ணே , இவர்களை நினச்சா
என் மனம் கொதிக்குதண்ணே ....................
அதான் கேட்டேன் .....................

ராமு : டேய் சோமு, அந்த காலத்துல நாட்டு துரோகிகளுக்கு
கழுவேற்றல் , நாடு கடத்தல் என்ற தண்டனைகள்
இருந்தன-மக்களும் பயத்தில் தவறுகள் செய்வதை
தவித்தனர் ...............இப்போது தவறு செய்தவர்கள்
தாங்களே நாட்டை விட்டு தப்பி ஓடுகிறார்கள் !!!!!!!!!!!!!!!!!!
துரோகத்திற்கு தண்டனை கொடுத்தால் தீர்ப்பை எதிர்த்து
நீதி மன்றங்களில் வருடக்கணக்கில் வாதங்கள்..........

அது சேரி நாடு கடத்தலும் நடக்காததொன்று ........

அந்த காலத்தில் அது சாதியம்............. இந்த காலத்தில்
விசா இல்லாமல் அது நடக்காது !!!!!!!!!!!!!!!!!!!!!!
சோமு : அண்ணே, எனக்கு தோணுது இந்த நாட்டு துரோகிகளை
துரோகிகள் என்று தீர்மானம் ஆனா பின்னர் , சமுத்திரத்தில்
தள்ளிவிடலாமே .................நாடு கடத்தல் எதற்கு அண்ணே .......

ராமு : நல்ல சாணக்கிய நீதி டா நீ சொல்லுவது ............ ஆனா
இந்த காலத்துல சாத்தியமா ............தெரியலையே
( தலை சொரிந்து கொண்டு போகிறார்.)
சோமு : ஹீ...............ஹீ ...................ஹீ ....................ஹீ ....!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Dec-16, 8:38 am)
பார்வை : 185

சிறந்த நகைச்சுவைகள்

மேலே