வானம் எனக்கொரு போதிமரம் - 1

நீங்கள் எத்தனை நல்லவர் என்பதை உங்கள் சகவாசம் மட்டுமே தீர்மானிக்கிறது.!

இருந்தும் உங்களை யாரேனும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ பிரகடனப்படுத்தினால் வாழ்க்கையின் அபாயகரமான தனிமைக்குத்தள்ளப்படுவீர்கள்..!

வாழ்க்கையிலிருந்து விலகி நிற்காதீர்கள்!
உங்கள் பலஹீனங்கள் உங்களுக்கு பலம் தரும்;

அதை வேண்டியவர்களிடம் வெளிப்படுத்தி அதைக்கட்டுக்குள் வைத்து விட்டால் மட்டுமே உங்களால் இந்த உலகினுக்கேற்ற குறைந்தபட்ச பரிசுத்தத்தை உங்களால் அடைய முடியும்..!

உங்களைச்சுற்றி ஆயிரம் பேர் கோடிக்கணக்கில் சுற்றி வந்தாலும் உங்களைப்பற்றிய ஒரு சுய ஆய்வும் சுதந்திர போக்கும் உங்களை யாருக்குப்பிடிக்காதோ அவரிடம் கேட்டுத்தெரிந்து, (ரகசியமாக அல்ல), அதை சரி செய்து கொண்டாலே மன அமைதி ஓரளவு வந்து சேரும்.!

இந்த உலகில் நண்பர்களை முற்றிலும் நம்பி விடாதீர்கள்,
உங்கள் அதீத நெருக்கம் அவர்களை துரோகிகளாக மாற்றிவிடக்கூடும்...!

இந்த உலகில் உங்கள் எதிரிகளை அடிக்கடி சந்தித்து மனம் விட்டு பேசுங்கள், அப்படிச்செய்தாலே உங்கள் கர்வத்தின் வஞ்சத்திலிருந்து நீங்கள் தப்பித்து விடலாம்.
எதிரிகளின் சதியையும் கணிக்க முடியும்.

உங்கள் எதிரிகளை வெற்று விமர்சனத்துடன் மட்டுமே பந்தாடுவதை தவிர்த்து அவர்களிடம் நேருக்கு நேர் எள்ளி நகையாடுங்கள். அது எல்லோருக்கும் பயன் தரலாம்.!

எல்லோரும் நல்லவருமில்லை, இங்கு எல்லாருமே கெட்டவரமுமில்லை...!,

உங்களைப்போலவே.....!!

எழுதியவர் : செல்வமணி (8-Dec-16, 9:07 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 561

மேலே