காதல் கீதம்

காதல் கீதம் ஒன்று காற்றில்
வந்தது--அது
என் செவியில் புகுந்து அவளின்
அழகை சொன்னது...

காதல் ஓவியம் ஒன்று நடந்து
வந்தது--அது
என் நெஞ்சில் புகுந்து அவளின்
பெயரை சொன்னது...

காதல் கடிதம் ஒன்று பறந்து
வந்தது--அது
என் எண்ணத்தில் புகுந்து
அவளின் காதலை சொன்னது...

காதல் நினைவலை ஒன்று மிதந்து
வந்தது --அது
என் உயிரில் கலந்து அவளுடன்
உறவாட சொன்னது...

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Dec-16, 5:22 am)
Tanglish : kaadhal keetham
பார்வை : 78

மேலே