தர்மத்தை அறிவோம்

திரௌபதியின் சுயம்வரத்தில் பல ராஜ்ஜியத்து அரசர்கள், மாமன்னர்கள், மற்றும் இளவல்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

சுயம்வர மண்டபம் கண்ணை கவர்ந்திழுக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருஷ்டத்தியும்னன் அனைவரையும் வாசலிலேயே நின்று வரவேற்று கொண்டிருந்தான். வாசுதேவ கிருஷ்ணன் அவ்வமயம் மண்டபத்தினுள் நுழைந்தார். அவர் இருப்பிடத்திற்கு செல்லும் வழியில் அனைவருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்தார்.

கர்ணன் எழுந்து நின்று கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தினான். அவனை கண்டவுடன், "தாம்தான் அங்கதேச அரசராய் இருக்கவேண்டும். தமது வதனத்திலிருந்து வெளிப்படும் தேஜஸ்ஸை கண்டு, அனைவரும் தமது வீரத்தை நன்கறிவார்கள். வந்தனங்கள்!" என கைகூப்பினான் கண்ணன்.

"எனது பணிவான வணக்கம்! இச்சந்திப்பை பாக்கியமாய் கருதுகிறேன். எங்கு நோக்கினும் தம்மை பற்றிய விவாதமே!" என்றான் கர்ணன்.

"ஆ... அதுவே தர்மத்தின் சக்தியாகும் கர்ணா. தர்மத்தை பற்றி அனைவரும் விவாதிப்பர், இருந்தாலும் எவரும் அதுபற்றி அறிய முற்படுவதில்லை." என கூறினான் கிருஷ்ணன்.

இராதேயன் வினவினான், "தாமே கூறுங்கள், அதை அறியும் மார்க்கம் என்ன?"

அதற்க்கு கிருஷ்ணன், "தர்மம் அங்கீகாரத்தை பெற்று தரவல்லது. வாழ்வில் ஒருவனுக்கு அவமானம் நேர்ந்தால் அவன் தர்மத்தை பின்பற்ற தவறினான் என்பது பொருள்.

" தன்னை பற்றி எண்ணி, "ஒருவன் பிறப்பிலிருந்தே அவமானத்தை சகித்து வந்தால், அவன் ஆற்றவேண்டிய பணி என்ன?" எனக் கேட்டான் கர்ணன்.

கிருஷ்ணன் கூறிய பதிலில் கர்ணன் சிந்தனையில் ஆழ்ந்தான். "அறுகதையைப் பெற எதிர்த்து நிற்கவேண்டும். அது அதர்ம வழியில் இருத்தல் ஆகாது. உனது அதிகாரத்தை பெற துணிந்து நில்! எனினும் உனக்கு அதிகாரமற்ற எதன் மீதும் மோகம் கொள்ளாதே." அதன் அர்த்தத்தை கேட்டான் அங்க தேசத்து அரசன்.

"இதன் தாற்பரியம் யாதெனில், தன்னில் வழிந்தோடும் அருவி மீது உயர்ந்த பர்வதம் இச்சை கொள்வதில்லை. நதியை தடுக்கும் இச்சையை பர்வதம் கொள்ளுமேயானால், அது உடைத்தெறியப்படும். நதி நீரின் அதிகாரம் பெற்றது சமுத்திரம் ஒன்றே!" என்று விளக்கினான் கண்ணன்.

"தம் வார்த்தை சமுத்திரத்தின் சக்தியை பற்றியதா?
இல்லை பருவதத்தின் இயலாமை பற்றியதா?"

என்று கர்ணன் கேட்க,

அவன் தோள் மீது கைவைத்து "கடலோடு நதி கொண்டிருக்கும் பற்றை பற்றியது கர்ணா!"

என்றான் வாசுதேவ கிருஷ்ணன்....!!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (16-Dec-16, 7:46 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : tharmaththai arivom
பார்வை : 248

மேலே