அழகினில் அமைதி - ஸ்தம்பித்து ஸ்திரப்படுங்கள்

வாழ்க்கையை ரசிக்க அழகினில் அமைதி காணுங்கள்.

அழகும் ஒரு உணர்ச்சி தான்,
கண் காது வைத்தால்
மூக்கு (மூச்சு) வரை நீளும்
இளமையில் வந்தால், காதல்,
முதுமையில், பரிவு.!

உள்ளம் தொட்டு உடலில்
தினவைத்தீண்டும் இளமையில்.
உள்ளம் அறிந்து உறவை விரும்பும்
கிச்சு கிச்சு தாம்பாளம் முதுமையில்.

அழகு இல்லாமல் எதுவுமே இல்லை,
இறைவனின் ஆக்கம்
அத்தனையிலும் பாருங்கள்,

பார்க்காமல் பார்த்தும் பார்க்காமல் போனால்
அழகும் அமைதியும்
இல்லாத திசையில்
ஆர்ப்பரிக்கும் திசையில்
காணாது போய்விடுவீர்கள்...!!

எழுதியவர் : செல்வமணி (16-Dec-16, 11:00 pm)
பார்வை : 196

மேலே