அன்பு + பரிவு + உறவு = சொந்தம்

அன்பை சமைத்து பரிவுடன் பரிமாறி
உறவைக்கொண்டாடினால், சொந்தம்.!

அன்பைத்தேடி பரிவைக்காட்டி
உறவாக்கிக்கொண்டால், பந்தம்..!

முன்னது பாசத்தால்,
பின்னது காதலால்..!

பாசம் வழுக்கும், அளவுக்கதிகமானால்,
கொடுக்கல் வாங்கலில் குறையானால்.

காதலிலும் இடரும், பற்றாக்குறையால்,
அன்றும் இன்றும் என்றும் குறைந்தால்...!

அன்பு முதலில் இலக்கியமாகும்,
இலக்கண சுத்தமாய் எதிர்பார்க்கும்,

பரிவு என்பதே மொழிப்பிரச்சனை,
புரிந்து கொள்வதில் மட்டுமே பிரச்சனையாகும்.

அன்பும் பரிவும் கணக்கு பார்த்து எடைபோட
பாசமும் காதலும் விடும், விடுபடும்...!

எழுதியவர் : செல்வமணி (17-Dec-16, 11:03 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 507

மேலே