நாரா காரா

பாட்டிம்மா நல்லா இருக்கறீங்களா?
@@@@
அடடே, பொன்னியா? வாடி. நீ நல்லா இருக்கறயா? உங்க அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாம் நல்லா இருக்கறாங்களா?
@@@@@
எல்லாம் உங்க புண்ணியத்திலே நல்லா இருக்கறாங்க பாட்டிம்மா. சரி தாமரை அக்காவுக்கு பிரசவத்திலே ரட்டைப் பசங்க பொறந்தாங்ககன்னு கேள்விப்பட்டேன். அக்காவும் கொழந்தைங்களும் நல்லா இருக்கறாங்களா?
@@@@
நல்லா இருக்கறாங்கடி பொன்னி. இன்னும் மருத்துவ மனையிலெதான் இருக்கறாங்க.
இன்னும் ரண்டு நாளு போனதுக்கப்பறந்தாம் வீட்டுக்கு அழச்ச்சிட்டு வருவான் எம் மவன் மாரிமுத்து.
@@@
சரிங்க பாட்டிம்மா கொழந்தைங்க பேர பதிவு பண்ணிட்டாரா மாமா.
@@@
அதெல்லாம் ஆச்சுடி பொன்னி. ஒரு பையம் பேரு 'நாரா'-வாம்; இன்னொரு பையம் பேரு 'காரா'- வாம்.
@@@@@
என்னங்க பாட்டிம்மா பசங்களுக்கு இப்பிடி நாரா காரா-ன்னு பேரு வச்சிருக்காரு மாமா?
@@@@@
எனக்கென்னடி தெரியும்? தமிழர்கள் எல்லாம் இப்ப கொழந்தைங்களுக்கு இந்திப் பேருங்களத்தானே வைக்கிறாங்க. எம் பையன் மாரிமுத்தும் மருமவ தாமரை மட்டும் வித்தியாசமா இருப்பாங்களா?
@@@@@
அதுவும் சரி தாம் பாட்டிம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nara = man. Kara = hindrance

எழுதியவர் : மலர் (17-Dec-16, 11:23 pm)
பார்வை : 208

மேலே