அம்மா

அ -உயிர்
ம் - மெய்
மா - உயிர் மெய்
யாவும் அம்மா

உன் மகள்
~ பிரபாவதி விஜயலட்சுமி வீரமுத்து

என்னதான் சாதித்தாலும்
உன் மகள் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமை அம்மா.......

ஊரே பாராட்டினாலும்
உன் வாழ்த்து தான் அம்மா
உயிரின் வாழ்த்து......

ஆயிரம் சோகங்கள் வந்தாலும்
அன்னை மடியில்
காணாமல் போய் விடும்.......

நோயிலும் அழகாய்
தெரிந்தேன் தாயிற்கு......

வளர்ந்தும் குழந்தையாக தெரிகிறேன்
என் தாய்க்கு.....

எவ்வளவு சாப்பிட்டாலும்
அம்மாவுக்கு அது ஒன்றுமே இல்லை.....
சின்னதாக ஒரு பாராட்டு
அதை பெரிதாக புகழ்பவள்.......
அவள் அன்பிற்கு முன்பு எதுவுமே இல்லை.....

உலகத்தார் எனை
எப்படி வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளட்டும்.....
என் அன்னைக்கு
நான் சிறந்த மகள்
என்ற பெயரே போதும்.......

உலகத்தில் உள்ள
ஒவ்வொருவருக்காகவும்
நடிக்க வேண்டுமாம்......
நான் நடிக்கவே தேவையில்லை
என் அன்னையிடம்......

எனை வாரி அணைத்து
உச்சி முகரும் வேளை
கண்களின் ஓரம் நீர் கசியும்....
அதற்கு ஈடாய் எந்த வார்த்தையும் இல்லை.....

தாயே.....
இன்னொரு பிறவி இருந்தால்
நீ எனக்கு மகளாய் வந்து
பிறந்துவிடு
உன்னை நாளும் சுமக்கிறேன் நான்....

இந்த பிறவியோடு
எனக்கு பிறவியே இல்லை தாயே....
உனக்கு மகளாய் பிறந்து விட்டேனே....
என் பிறவி பயனை அடைந்தேனே
உன் அருகில்
உனது பாசத்தில்.......

என் தாயானாலும்
என் சேய் நீ....
உனை என் நெஞ்சுக்குள்
வைத்து தாங்குவேன் நித்தமும் அம்மா......

~ உன் மகள்
பிரபாவதி விஜயலட்சுமி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 9:07 am)
Tanglish : amma
பார்வை : 598

மேலே