தமிழ்

தமிழச்சியாய் பிறந்த பின்பு தான்
நான் இந்திய குடிமகள்.....

இந்தியாவில் ஒரு மொழி மாத்திரம் இல்லை.....

நீங்கள்
என் மொழியை கற்றீர்களா.....?????

பின்பு நான் மட்டும்
ஏன் உங்கள் மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென்று எங்கள் மீது திணிக்கிறீர்கள்....

இந்தியா
இந்தி மட்டும் ஆளும் நாடு அல்ல.....
இந்துக்கள் மட்டும் வாழும் நாடுமல்ல......

இந்தியா
சிந்து நதியின் பெயரால் தோன்றியது...

என் நாட்டின் மீது
எனக்கு பற்று அதிகம்....
நானும் பாரதத்தின் குடிமகள்.....
தேசிய கீதம் பாடும் பொழுது தேகம் எல்லாம் சிலிர்க்கும்.....
தாயின் மணிக்கொடி என்று பாடும் பொழுது
வெள்ளையனை நினைத்து இரத்தம் கொதிக்கும்....
என் தேசிய கொடியை பார்க்கும் பொழுது
எத்தனை எத்தனை வலிகளை சுமந்து
குருதி சிந்தி கிடைத்த சுதந்திரம்.....
பார்க்கும் இடங்களில் எல்லாம்
பசுமை நிறைந்த பாரதம்
இன்று காய்கிறதே....
அமைதியின் நாட்டில்
இன்னும் வன்முறை
சாதி மத கலவரம் ஒழியவில்லையே என்று தோன்றும்.....

என் நாடு சனநாயக நாடு....
அமைதியான நாடு.....
எல்லோரும் இப்படியே எண்ணினால் நன்றாக இருக்கும்.....

ஒவ்வொரு மாநிலத்திற்கும்
ஒரு ஆட்சி மொழி இருக்கிறது....
அதிலேயே பேச விடுங்கள்....
சனநாயக நாடு என்ற வார்த்தையை காப்பாற்றுங்கள்.....

*****************

செம்மொழி
எம்மொழி
எல்லாவற்றிற்கும் தாய்.....

நாகரிகத்தின் அடையாளம் நாங்கள்.....
தமிழர்கள்.....
உலகம் தோன்றியது எங்களில் இருந்து தான்......

(நாங்கள் சேயின் விருப்பத்தை
நிறைவேற்றுபவர்கள்.
தெலுங்கு தனியாக போக வேண்டும் என்று ஆசை பட்டது.
எல்லா மொழியையும்
அவரவர் விருப்பத்திற்கு.
நன்றாக வாழுங்கள் என்று.
தெலுங்கு ,கன்னடம், மலையாளம் என்று பிரித்து கொடுத்த
திராவிடர்கள் நாங்கள்.....

இந்தியா ஒரு அமைதியான நாடு
வீண் வம்பிற்கு போகாது.
வீரத்தில் எங்களுக்கு நிகர் நாங்களே....
உயிரை கொடுத்து காக்கும்
எங்கள் அண்ணன்கள்
இராணுவத்தில்......
ஆனால் உள்நாட்டு கலவரத்தையும் அரசியல்வாதிகள் தான் கிளப்பி விடுவார்களே தவிர
அதிக மக்கள் கலவரத்தை விரும்புவதில்லை....

வட இந்தியாவில் எப்படி என்று தெரியவில்லை...
இங்கே தென்னிந்தியாவில்
திராவிட நாட்டில்
மக்களுக்குள் பேதம் பார்ப்பதில்லை....
ஒரு சில மிருகம் பார்க்கலாம்....
அதை ஒன்றும் செய்ய முடியாது....
அது எல்லாம் சாகும் வரை திருந்தாது....

நாங்கள்
இந்தியா
தமிழ்நாடு
என்று பிரித்து பார்க்க நினைக்கவில்லை.....
நீங்கள் உங்கள் மொழியை
எங்கள் மீது திணித்து
பேச வைக்கிறீர்கள்.....

நீங்களே யோசித்து பாருங்கள்
உங்களுக்கு
உங்கள் மொழி எவ்வளவு
உயர்ந்ததோ.....
அதே போல் தானே
எங்களுக்கும் எங்கள் மொழி.......

நாங்கள்
எங்கள் இலங்கையை தந்தோம்
எங்கள் கச்சத்தீவை வாரி
எங்கள் கண்ணெதிரிலேயே தந்தீர்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.....

எங்கள் வேங்கடத்தை நாங்களே
எடுத்து கொடுத்தோம்....

அன்புக்கு தலை கொடுக்கும் நாங்கள்....
தவறென்றால் தலை எடுப்போம்.....

அன்பே சிவம்
படித்த நாங்களே தான்....
ரௌத்திரம் பழகு என்பதையும் சுவாசித்தோம்....
சுவாசிக்கிறோம்....

இந்தியா
என் நாடு....
இந்தியர்கள் யாவரும்
என் உடன் பிறந்தவர்கள்.....
நானும் மனதில் உறுதிமொழி எடுக்கிறவள் நாளும்....
தேசியக் கொடியை நெஞ்சில் குத்திக் கொள்பவள் கர்வமாக....

நானும் இந்திய குடிமகளே....

எங்கள் மீது
உங்கள் மொழியை திணிக்காதீர்....
அந்தந்த மாநிலத்தை
அந்தந்த மொழி ஆளட்டும்.......

#வாழ்க_தமிழ்.....

கலாச்சாரம்
பண்பாடு பிறந்த நாட்டில்.....
அதை கடைபிடியுங்கள் மக்களே.....

சாதி மதம் பார்க்கும் பேயே....
நீ சாப்பிடும் உணவு......
நீ உடுத்தும் உடை......
இது எல்லாம் எங்கிருந்து வந்ததென்று அறிவாயோ......

ஆயிரம் ஆயிரம் மக்களின்
வியர்வையும்
ரத்தமும் சிந்தி
அதில் வந்ததடா அது.......

அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்......

அன்பே கடவுள்......
மனிதன் என்றால் மனிதம்......

இசை போல மொழி கடந்து
எல்லை கடந்து
பண்பான மனிதத்தோடு வாழுங்கள்.......

ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு
அதை இழந்து விடாதே......

இந்தியை நீங்கள் நேசிக்க காரணம் இருக்கலாம்...
தமிழை நாங்கள் சுவாசிக்க
காரணம்
நாங்கள் மனிதர்கள்......
தமிழர்கள்......
தமிழ் எங்கள் உயிர்......
இங்கே தான் உலகம் பிறந்தது.....
இங்கே தான் கலாச்சாரம்
பண்பாடு
எல்லாம் பிறந்தது......

உங்களுக்கு
நாங்கள் சொல்வது திமிர் என்று தோன்றலாம்.....
எங்கள் இடத்தில் இருந்து உணர்ந்தால் தான்
உங்களுக்கு புரியும் எங்களின் தமிழின் பெருமை.....

நீயும் தமிழன் தான்....
உலகில் உள்ள எல்லோரும் தமிழன் தான்.....

மனிதன் யாவரும் தமிழன்......

விளை நிலத்தை விலை நிலமாய் மாற்றாதீர்...
என் தாய் மண்ணும் தமிழும் வேறில்லை....
இரண்டும் ஒன்று தான்...

நம் உயிர் தான்......

~ தமிழச்சியாக பிறந்து
தமிழச்சியாக வளர்ந்து
ஒவ்வொரு நொடியும் தமிழச்சியாகவே வாழ்ந்து
தமிழச்சியாகவே மரணிக்க நினைக்கும்
தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 9:17 am)
Tanglish : thamizh
பார்வை : 131

மேலே