நிசமான நிழல்

ஒரு உண்மையை சொல்லட்டுமா.....
இங்கே யாரும் தமிழை வளர்க்கவில்லை.....
விளம்பரத்தை தேடுகிறார்கள்....
இங்கே யாரும் தமிழ் இனத்திற்காக பாடுபடுவதில்லை.....
சன்மானத்திற்காக பாடுபடுகிறார்கள்.....
இங்கே யாரும் மொழிக்காக பேசவில்லை
விழி ரசிப்பதை பேசுகிறார்கள்
அது கேவலமானதாக இருந்தாலும்.....
இங்கே தமிழ் எழுத்துக்கள் எல்லாம்
படாத பாடு படுகிறது பாட்டில்.....
தனக்கென்று தானே புகழ்ந்து
தானே பேசி
தானே பட்டம் சூட்டி
தமிழையும் கெடுக்கும் கயவர்கள்.....
ஒரு கூட்டத்தை கூட்டி
மக்களை ஏமாற்றி....
மக்களின் உழைப்பை திருடி
அந்த உழைப்பில் குளிர்காயும் நல்லவர்கள்....
தமிழ் இனத்திற்காகவும்
மொழிக்காகவும் என்ன செய்தாய் என்றால்
ஒன்றும் இருக்காது
வெறும் பம்மாத்து தான்
ஆனால் வாய் மட்டும் கிழியும் தமிழ் தமிழ் தமிழ் என்று பொய் ஒழுக்கத்தோடு.
ஏன் என்றால் எல்லோரும் தனையே பார்க்க வேண்டும்.
தான் தான் தமிழின் தூண்.
மொழியை நிலைநாட்டுகிறேன் என்ற மமதை...

அப்படி என்ன நீ செய்தாய்.....
திருவள்ளுவரையும்
கணியன் பூங்குன்றனாரையும்
பொன்னியின் செல்வனை விடவும்...

நாம் நம் மொழியில் பேசுவது
நம் அடையாளம்....
நம் மொழியை பெருமையாக எண்ணுவது
நம் கடமை.....
நம் மொழிக்காக நாம் என்ன செய்தாலும்
அது ஈடு இல்லை.
நம் தாய்க்கு நாம் செய்யாமல் யார் செய்வார்....
தாய்க்கு செய்வதை சொல்லிக் காட்டுவது
அசிங்கம் இல்லையா....பம்மாத்திற்காக....

நான் தமிழச்சி.....
விளம்பரம் அல்ல.....
என் அடையாளம்......

உனக்கும் ஒரு அடையாளம்
இருக்கும்
அதை மறந்து இழந்து விடாதே....

தமிழ் உன்னால் வாழ வில்லை....
தமிழால் தான் நீ வாழ்கிறாய்.......

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:04 am)
பார்வை : 471

மேலே