முக தரிசனம்

என் மனம்
சோம்பல் படுகிறது ,,,

உந்தன் வருகைக்காக
காத்திருக்கையில்
நிமிடங்கள் யாவும்
யுகமென செல்வதால்
என் மனம்
சோம்பல் படுகிறது ,,,,,

நித்தம்
உந்தன் கனவுக்கடலில்
மூழ்கி
முத்தெடுக்க
என் மனம்
சோம்பல் படுகிறது ,,,,,

கனவினில் மட்டும்
நின்தரிசனம் தந்து
நிஜத்தினில்
முகம் மூடி செல்கையில்
என் மனம்
சோம்பல் படுகிறது ,,,,,

என்று கிட்டும்
உந்தன் முக தரிசனம்
உனக்கான காத்திருத்தலில்
என்போல்
காலநேரமும்
சோம்பல் படுகிறது

நேரக்கணக்கை
தவறவிட்டு ,,,!

எழுதியவர் : தங்கதுரை (18-Dec-16, 11:06 am)
Tanglish : muga tharisanam
பார்வை : 428

மேலே