ஹி ஹி

நான் : ஏய் காஞ்சி போது டி...
காஞ்சி போது...
தோழி : காஞ்சி போதுனா .
தின்னு தொல டி...

நான்: அட தீனி பண்டாரமே...
எப்பயும் திங்கறதுலயே இரு...

தோழி: என்ன வாய் நீளுது எரும...

நான் : அட பக்கி...
காஞ்சி பஸ் போகுதுனு சொல்றன்.அது உன் கண்ல படல...

தோழி : அடி லூசு....
அத தெளிவா சொல்றது இல்ல...

நான் : இவங்க குழந்த.
அ ன ஆ வன்னா சொல்லி தரட்டுமா...

தோழி: ஒழுங்கா வாய மூடிட்டு
சிப்ஸ் அ தின்னுடி .என் சிப்பு...

நான் : வாய மூடிட்டு எப்புடி டி சாப்ட முடியும்.நீ ஓரமா நில்லுடி .
என் வென்று.
போற பஸ்ஸ நீயே மறச்சிட்டா எப்புடி...

தோழி: அவ அப்பவே சொன்னா.
இவ கூட போனா நடு ரோட்ல நிப்பனு.என் சின்ன மூளைக்கு இது எட்டமா போச்சே...

நான்: பஸ் ஏற எல்லாரும் நடுரோட்ல தான்டி நிக்கனும்.என் பொட்டேட்டோ..

அதே அவ .எங்கிட்டயும் சொன்னா...
இந்த மென்டலயா கூட கூப்டு போறன்னு..

தோழி : சரி சரி ..
அந்த சிப்ஸ் அ இப்படி குடு.

நான்: சிப்ஸ் ஆ...
அப்புடின்னா...😎

ஹா ஹா...
இந்தா இந்தா...
சும்மா...
சரி நீ உக்காந்து சாப்டு.
நான் பஸ் வருதானு பாக்கறன்.

தோழி: 😎😎😎😊😊😊 பஸ் வருதானு பாக்கறது இல்லாம .துண்டு போட்டு சீட்டும் நீ தான் பிடிக்கணும்.
(எனக்கு ஒரு அடிமை சிக்கிட்டா...)

நான் : 😎😎ஆங் என்ன மேடம்...
எல்லாம் என் நேரம் டி...

தோழி : சும்மா...
😁😁😁

நான்:😊😊😊

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:06 am)
Tanglish : he he
பார்வை : 62

மேலே