முத்து

எடுத்துக் கோர்த்த முத்துக்களில் ஒன்று
தவறி விழுந்தது
தவறிய முத்தை தேடி தவமிருக்கிறேன்.....


முத்தே
என் வாழ்வின் சொத்தானதால்
என் வாழ்வின் பொருள் தேடி
தெரு தெருவாய் தேடி அலைகிறேன்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்

தெரு நாய்களால்
கடி வாங்குகிறேன்

வெறி பிடித்த
நாய் அனைத்தையும்
கொன்று புதைத்தேன்
என் முத்தையும் கடித்து விட்டால்.....

என் சொத்தை தேடி
வாழ்நாள் முழுவதையும் அடகு வைத்தேன்.......
தவணை முறையில்
உயிரும் உருகுகிறது

நிற்கும் உயிருக்கு
அவளின் நினைவே துடிப்பாய்.....

ஓரிடத்தில் கண்டோம் என கண்டவர்கள் சொன்னார்கள்
காதில் தேனருவி பாய
மேனி சிலிர்க்க
ஆவி துடிக்கிறது
உயிர் பறக்கிறது
இனி ஒரு நிமிடமும்
என் கண்ணம்மாவை பிரிந்திருக்க இயலாது

என் கண்ணே
என் கண்ணம்மா
நீ எங்கே இருந்தாலும்
நல்லா இருப்ப டா.....
நான் வந்துட்டே இருக்கன் மா
சீக்கிரமா வந்துடுவன்.....

நேரம் யுகங்களாய்
கடக்கிறது சகி.....
பார்த்தவர்கள்
சொன்ன பாதை
கண்ணீரை தாண்டி
தேடலின் விளிம்பில்
கண்டு விட்டேன்
அதோ என் சகி.....

காற்றின் வேகத்தால்
மண்ணில்
இலைகளுக்குள் புதைந்திருக்கிறாள்.....

ஓடி போய்
சகியை தூக்கி
மடியில் தூக்கி
கடத்திக் கொண்டேன்.....
என் உயிர் மீண்டும் என்னுள் .....
சகி
எழுந்திரு சகி
என்ன பாரு சகி
எழுந்திரு....
எழுந்திரு சகி....

என் சகி எழுந்து எனை பார்க்கிறாள்
தூக்கி நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டேன் இதயத்தில்....
இனி பிரிவு என்பதே எங்களுக்குள் இல்லை.....

கன்னத்தில் முத்தமிட்டேன் .....
கண்ணம்மா....
உச்சிதனை முகர்ந்தேன்.....

கீழே இறக்கி வைக்கவே மாட்டேன்
என் சகியை
எப்பொழுதும்
என் நெஞ்சோடு
சேர்த்தணைத்தே வைத்திருப்பேன்.....
என்றைக்கும்......

என் கண்ணே
என் கண்ணம்மா
என் சகியே.....

உன் வார்த்தைக்குள் தான்
என் வாழ்க்கையே இருக்கிறது.....
உன் குரலை கேட்டே நாளும்
வாழ்கிறேன்......
உன்னால் தான் இயங்குகிறேன்....
இல்லையேல் இறந்திடுவேன்.....
கண்ணம்மா....
உன் கையை விடவே மாட்டேன் எப்பொழுதும்.....

சகி......
உன்ன விட்டு எங்கயும் போக மாட்டன்...
என்ன தனியா விட்டுட்டு போயிடாத சகி.....
இந்த உயிரால தாங்கிக்க முடியல சகி.....

சகி
ஒரே ஒரு தடவ
அக்கா என்று சொல்லு சகி.....

சகி சகி சகி

மொட்டவிழ்த்து விடு இதழ்களை

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 12:49 pm)
Tanglish : muththu
பார்வை : 140

மேலே