முட்டாள் குருவும் புத்திசாலி சீடனும்

ஒரு ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார்.புதிதாய் வந்திருக்கும் சாமியாரிடம் ஊர் மக்கள் அனைவரும் சென்று ஆசீர்வாதம் பெற்று அவரைப் பற்றி புகழ்ந்து பேசியவாறு செல்வதைப் பார்த்த ஒருவன் தானும் சென்றான்.சாமியாரை அடைந்து விழுந்து வணங்கினான்.
சாமியார் : "நலம் உண்டாகட்டும் மகனே ! உனக்கு என்ன வேண்டும் கேள் ".
சீடன் : சாமி நானும் உங்களைப் போல துறவியாகனும்.அதுக்கு நீங்க என்னை உங்க சீடனா ஏத்துக்கனும் சாமி".

குரு : இவ்வளவு சின்ன வயதில் எதனால் துறவியாக வேண்டும். உனக்கு திருமணமாகிவிட்டதா ? பெற்றற்றவங்க இருக்காங்களா ?

சீடன் : எங்க அம்மா தொந்தரவு தாங்க முடியாம என்னோட அப்பா என்னோட சின்ன வயசிலயே வீட்ட விட்டு ஓடிப்போய்ட்டார்.என்னோட கல்யாணமான எல்லா நண்பர்களும் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலைன்னு புலம்புறாங்க.அதனால்தான் அவங்க பட்டு தெரிஞ்சிக்கிட்டத நான் எனக்கு பாடமா நெனைச்சிக்கிட்டு இப்பவே துறவியா மாறிடலாம்னு இருக்கேன்.நீங்கதான் பெரிய மனசு பண்ணி என்னை உங்க சீடனா ஏத்துக்கனும்.

குரு : சரியப்பா உன் அப்பா பெயர் என்ன ?

சீடன் : குருசாமி !

குரு :அம்மா பெயர் ?

சீடன் ; செல்லத்தாய் .

(குரு தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறார் )

சீடன் : சாமி நீங்கள் ஏன் அழறீங்க ? நான் எதாவது தப்பா செஞ்சிட்டேனா ?
பேசிட்டேனா ?

குரு : நீ எந்த தப்பும் செய்யலப்பா எல்லாத் தப்பையும் நான்தான் செஞ்சேன். உனக்கு இப்ப இருக்கிற அறிவு எனக்கு உன் வயசில இருந்திருந்தா இன்னைக்கு உனக்கு இந்த நிலமை வந்திருக்குமா ?

(இன்னும் சத்தமாக தலையில் அடித்தபடி அழ ஆரம்பிகிறார்)

சீடன் : புரியல சாமி !

குரு : அட மடப்பய மவனே !
நான்தான்டா உங்க அப்பன் !

சீடன் மயங்கி விழுகிறான் )

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (18-Dec-16, 2:41 pm)
பார்வை : 508

சிறந்த நகைச்சுவைகள்

மேலே