இறைவனின் உன்னதமான படைப்பு

உங்கள் நண்பன் பிரகாஷின்
100ம் படைப்பு.......

கடவுள் படைத்த
உன்னதமான படைப்பில்
ஆணும் ஒன்று டா.....

இதை அறியாதவன்
வாயில் என்றும்
மண்ணு டா.......

இப்பிறவியில்
ஆணாய் பிறந்தது
முன்ஜென்ம புண்ணியம்
என்று எண்ணு டா......

ஆணின் சிறப்பினை
சொல்லும்
இக்கவிதையில்
என்றும் வை
ஒரு கண்ணு டா......

பல வலிகளை சுமக்கும்
ஆணின் மனசு.....

அதுக்கு நிகரே இல்ல
வேற மனசு......
(2)


குடும்பம் எனும் கோவிலுக்கு
நல்ல தலைவன் ஆகுறான்....

சேவைகள் பல செய்து
நல்ல தொண்டன் ஆகுறான்.....

வாழ்க்கையில் என்றும்
ஹீரோ ஆகுறான்......

அன்புக்கு மட்டும்
ஜீரோ ஆகுறான்......

கஷ்டத்தை மறந்து
ஒரு பொம்மை ஆகுறான்.....

அன்ப வச்சி
என்றும் அடிமை ஆகுறான்......

காதல மறைச்சி
கண்ணீர் விடுகிறான்.....

உண்மைய சொல்லி
தினமும் புலம்பி தவிக்கிறான்.....

வாழும் போதே
இன்னொரு கடவுள் ஆகுறான்...

வாழ்ந்த பின்னும்
ஒரு தெய்வம் ஆகுறான்.......

பல வலிகளை சுமக்கும்
ஆணின் மனசு.....

அதுக்கு நிகரே இல்ல
வேற மனசு......

இன்பம் துன்பம் வந்தாலும்
சிரிக்கிறான்..... சிரிக்கிறான்....

சோதனை வேதனை வந்தாலும்
தாங்குறான்.... தாங்குறான்......

இரவு பகல் பாராமல்
உழைக்கிறான்.... உழைக்கிறான்.....

வெற்றி தோல்வி வந்தாலும்
ஜொலிக்கிறான்... ஜொலிக்கிறான்....

நாட்டுக்கே ராஜா ஆனாலும்
வீட்டுக்கு ஒரு பூஜா ஆகுறான்......

(பல)

அடியே பெண்ணே....

தெரிந்து கொள்ளடி....!
ஆணின் சிறப்பினை.....

நிறுத்தி கொள்ளடி.....!
அவனை ஆட்டி வைக்கும்
உந்தன் சிறப்பினை.....

அவன் முகத்தில் பிறக்கட்டும்
ஒரு முத்துச் சிரிப்பு......

ஒருநாளும் காட்டமாட்டான்
வாழ்க்கையில் வெறுப்பு......

ஆணின் மனசு
என்றும் வெளுப்பு.........

அவன் பிரம்மனின்
மிகச்சிறந்த படைப்பு.......

ஆண் என்ற இறைவனின்
மிகச்சிறந்த படைப்பினை
பெற்று வாழும் ஆண் வர்க்கத்திற்கு
இக்கவி சமர்ப்பனம்.........

~~~~பிரகாஷ்.வ~~~~

எழுதியவர் : பிரகாஷ்.வ (18-Dec-16, 8:14 pm)
பார்வை : 224

மேலே