அப்பா

அப்பா ....,

உலகில் உன்னைவிட நான்வேறு
உலகம் கண்டதில்லை

உன் தோள்மீது தாங்கியே
என் உலகம் காட்டியவரே

நான் நடைபழக கற்பித்த
என் நாட்டியன் நீ அல்லவா

என் விரல்களை..,
ஒவ்வொன்றாய் விரித்து
எண்ணிக்கை சொன்னவரே

ஏட்டுக் கல்வி நான் பயில
எங்கிருந்தும்,
என்னுடன் ஏடு தூக்கி வந்தவரே

வீட்டுக்குள்ளே விண்வெளியின்
விஞ்ஞானத்தைச் சொன்ன என்முதல்
மெஞ்ஞானன் நீ அல்லவா...

"என்றும் நன்றியை மறவாதே"
எனபோதித்த எந்தன்
நல்லொழுக்க நாயகனும் நீ அல்லவா...

உறவுகள் ஆயிரம் வந்தாலும்
என்முதல் உறவில் முதலிடம் கொண்டவரே...

எந்தன் உணர்வின் வேர்களில் சாகா
ஊக்க நீர்ப்பாய்ச்சியவரே
கடவுளை கண்டதுபோல்
இன்றுவரை நேசிக்கிறேன்,

எத்தனை தருணங்கள்...,
நான் புகழோடு வாழவே
உன் இகழ்ச்சிகளை மறைத்து விட்டாய்
நீதானே நீதிமான் நிமிர்ந்து நின்றாய்
நீலவான்வரை...

என்றுமே என்னை நீயும்
உந்தன் உயிரோடு ஒட்டிக் கொண்டாய்...

அப்பா......
என்னுடன் நீ இருந்தால் போதுமே
நான் கடல்மீதும் நடப்பேன்
விண்ணிலும் மிதப்பேன்

நான் எத்தனை புகழோடு வாழ்ந்தாலும்
அங்கே,
ஒற்றை வேந்தனாய் உன்னையே வைப்பேன்.......,

- கலைவாணன்

எழுதியவர் : கலைவாணன் (19-Dec-16, 8:49 am)
Tanglish : appa
பார்வை : 840

மேலே