முத்தமிழ்க் காவலர் கிஆபெவிசுவநாதம் அவர்களின் நினைவு சில

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு தின (1994) சிறப்பு பகிர்வு (சில)

முத்தமிழ்க் காவலரை பலரும் தமிழ் சிமிழுக்குள் வைத்து அடைத்துவிட்டார்கள். தமிழ்ச் செல்வம், எண்ணங்கள், அறிவுக்கு உணவு ஆகியவை அவரது அற்புதமான புத்தகங்கள். தமிழின் சிறப்பை அவரைப்போல சொக்கவைக்கும் அளவுக்கு யாராலும் சொல்ல முடியாது. தான் வாழ்ந்த காலம் முழுதும் போராட்டக்காரராக இருந்தவர்.

1938-ல் இந்திக்கு எதிரான போராட்டக் களத்திலும் இருந்தார். 1980-களில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டக் களத்திலும் இருந்தார். 'திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டபோது, 'தமிழர் கழகம்’ என்று பெயர் வைக்கச் சொன்னவர் அவர். அது ஏற்கப்படாததால், அவரே 'தமிழர் கழகம்’ நடத்தினார். மொழியை வெறும் வியாபாரமாகக் கருதாமல் விழிகளாகக் கருதிய தமிழ்ப் போராளி.

திருச்சி மருத்துவ கல்லூரிக்கு எதற்காக கி ஆ பெ விசுவநாதம் பெயர்?

கி.ஆ.பெ பதினேழு வயதில் நீதி கட்சியில் சேர்கிறார். முதலில் திருச்சியில் கட்சி பொறுப்பினை கவனித்து கொண்டிருந்தவர் பிறகு தென் மாநிலங்களின் (தமிழகம், கேரளா, ஆந்திரா) செயலாளராக நியமிக்க படுகிறார். நீதி கட்சி தேர்தலை சந்திக்கிறது. வெற்றியும் பெறுகிறது.

திருச்சியில் கட்சி பனி ஆற்றிய ஒருவர் கி.ஆ.பெ அவர்களை சந்தித்து அய்யா நான் நம்ம கட்சி வெற்றிக்கு பெரிதும் பாடு பட்டேன், எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். சொல்லு யா என்ன செய்யணும்..

எனக்கு ஒரே பையன்.. இன்டெர் மீடியட் பாஸ் பண்ணிட்டான், அவனுக்கு டாக்டர் சீட் எப்படியாவது வாங்கி குடுக்கணும் அய்யா. சரி நாளைக்கு வா, நா சென்னை போறேன், அங்க போய் பனகல் ராஜா (அன்றைய முதலமைச்சர்) அவர்களை போய் பாப்போம்.

சென்னை சென்று பனகல் ராஜா அவர்களை சந்தித்து கி.ஆ.பெ முறைடுகிறார். பனகல் ராஜா தன்னுடைய செயலாளரை அழைத்து இந்த பையன் வாங்கீருகிர மதிப்பெண் கு டாக்டர் சீட் கெடைக்குமா நு பாத்து சொல்லு ...

கெடைக்கும் அய்யா... சரி கி.ஆ.பெ நீ போ.. லிஸ்ட் ல பையன் பேரு வரும்.

லிஸ்ட் வருகிறது பையன் பேரு இல்ல.. அய்யா என் பையன் பேரு வரலையா...அடுத்த லிஸ்ட் ல வரும் போய் பாரு.

அய்யா ரெண்டாவது லிஸ்ட் ளையும் வரலையா...

கி.ஆ.பெ மிகுந்த கோபத்துடன் சென்னை செல்கிறார்... பனகல் ராஜா அவர்களை சந்தித்து அந்த பையனுக்கு சீட் கெடைகல... என்ன சொல்ற கி.ஆ.பெ... பனகல் ராஜா தன்னுடைய செயலாளரை அழைத்து என்னய்யா ஆச்சு நா சொன்னது. இல்ல அய்யா அதுல ஒரு சிக்கல்.

இன்டெர் மீடியட் மட்டும் படிச்சிருந்தா பத்தாது கூடவே சமஸ்க்ரிதம் இருக்கனும் அய்யா.. எவண்டா சொன்னது... சட்டம் சொல்லுது அய்யா...

கோபம் கொண்டு எழுந்த கி.ஆ.பெ , பனகல் ராஜா அவர்களின் துணையுடன் நீதி கட்சி (ஆளும் கட்சி ) கூட்டத்தை கூட்டி தீர்மானம் போடுகிறார்.. அனைவரும் மருத்துவ படிப்பு படிக்கலாம்.. சமஸ்க்ரிதம் தேவை கிடையாது என்று..

இன்று சாதாரண மக்கள் பல பேர் மருத்துவர்களாக இருப்பதன் வரலாறு..

ஒரு விழாவில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், "தமிழ் தேனைப்போன்ற இனிய சுவை உடையது.

பேசினாலும், கேட்டாலும், தமிழிலே தேன் சொட்டும்!!
பாருங்களேன்!
படித்தேன!!
உட்கார்ந்தேன்!!
பார்த்தேன்!!
சிரித்தேன்!!

என்றெல்லாம் கூறிப் பாருங்கள், ஒவ்வொன்றிலும் தேன் சொட்டுகிறது அல்லவா?'' என்று கூறவும் விழாவில் பலத்த கை தட்டல்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (19-Dec-16, 10:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 103

மேலே