நாடு அதை நாடு

உலகின் ஜனத்தொகை...
இரண்டாம் இடத்தில்
இந்தியா..
இளைஞர்களின்
எண்ணிக்கையிலோ
முதலிடத்தில்...

ஆட்சிகளின் மாற்றத்தில்
அவரவரிடம் இருக்கிற
பணத்தை கையாளும்
விஷயத்திலும்
வரிகள் விதிப்பதிலும்
மட்டுமே எப்போதும்
வருகிறது மாற்றம்...

தனி நபர் வருமானம்
உயர வரவில்லை
இன்னும் மாற்றம்...

வேலை இல்லாதவனுக்கு
வேலை கிடைத்திட
உயர்வாய் வரவில்லை
இன்னும் மாற்றம்...

சிறந்த கல்வியில்
தேர்ந்த மாணவர்கள்
வெளிநாட்டு நிறுவனங்களில்
பணியில் சேர்வதில்
பாங்காய் வரவில்லை
இன்னும் மாற்றம்...

விவசாய விளைநிலங்களில்
விளைபொருள் உற்பத்தியில்
உயர்வாய் வரவில்லை
இன்னும் மாற்றம்...

தொழில்கள் புதிதாய்
வருவதில் வரவில்லை
இன்னும் மாற்றம்...

மின்சார உற்பத்தி...
காற்றாலை கைகொடுக்கும்
போதெல்லாம் தன்னிறைவு
இல்லாவிடில்
இருட்டின் நிறைவு...
இதில் வரவில்லை
இன்னும் மாற்றம்...

மிக்கேல் பாரடேயும்
தாமஸ் ஆல்வா எடிசனும்
கர்மவீரர் காமராஜரும்
இன்றிருந்தால்
இந்தியாவின் இந்நிலை
கண்டு கேட்டிருப்பார்கள்
ஏன் வரவில்லை
இன்னும் மாற்றம்...

அதிக செலவில்
மட்டுமே நல்ல மருத்துவம்
அதில் வரவில்லை
இன்னும் மாற்றம்...

இயற்கைச் சீற்றங்களை
இயல்பாய் எதிர் கொண்டு
வாழ்ந்திட வரவில்லை
இன்னும் மாற்றம்...

பொது இடங்களில்
அரசு பள்ளிகளில்
அரசு நிறுவனங்களில்...
சுத்தம் சுகாதாரம்
கழிப்பிட வசதிகளில்
வரவேற்கத் தக்க
அளவில் வரவில்லை
இன்னும் மாற்றம்...

வரவேண்டியவற்றிலெல்லாம்
விரைவாய் வரவில்லை
இன்னும் மாற்றம்...

இருபது வயதைக்
கடந்த இளைஞன்
ஒவ்வொருவனும்
வேலைக்காக காத்திருக்காமல்
புதிது புதிதாய்
வேலைகள் அவர்களுக்கு
என்று காத்திருக்கிறதோ

அரசு ஆண்டோரும்
அரசு ஆள்வோரும்
சிகிச்சை பெற
அரசு மருத்துவமனைகள்
என்று தயாராகிறதோ
அன்றுதான் ஆரம்பிக்கும்
உலக மேடையில்
இந்தியாவின் உயர்வு...

அதுவரை மனித வளத்தில்
மாபெரும் இந்தியா
அமெரிக்காவையும்
ஜப்பானையும்
கொரியாவையும்
பிரேசிலையும்...
ஏன் சீனாவையும்
அண்ணாந்து பார்க்கும்...
பரிதாபமாய்...

அரசாங்கங்களின்
வழிகாட்டலில்
மக்களின் பங்காற்றலில்
மாற்றங்கள் உருவாகட்டும்...
அப்போது பாரினில் உயரும்
இனிய நம் இந்தியா
வல்லரசாய்...
நல்லரசாய்...

எப்போது கிடைக்கும்
நல்ல அரியாசனம்
இந்தியத் தாய்க்கு
இந்தப் பேருலகில்...

இன்னும் இன்னும்
மாற்றத்திற்கு காத்திருக்கும்
இந்தியர்களில் ஒருவன்
இரா.சுந்தரராஜன்...
👍
இனிய காலை வணக்கம் 🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (20-Dec-16, 9:55 am)
Tanglish : naadu athai naadu
பார்வை : 772

மேலே