நாகரீக பெண்மை

பெண்மையில் அழகாம் தோழி
உண்மையில் அதுபோல்
பெண்ணொன்று உண்டென்றால் அது
இறைவன் வாழும் உலகில்
ஒன்றிலே சாத்தியம்....

அழகில் பெண்மை இல்லை இங்கே
மனதை,
மயக்கும் பெண்மை இங்கு
உண்டு என்றால் அதுவே
கவிஞன் கண்ட பெண்மை அவள்
முத்தமிழில் மொத்தம் அவள் ...,

எத்தனை கவிஞன்
எண்ணற்ற கவிதை பெண்மை பற்றி
வாசிக்க வாசிக்க பெண்மை அது
மெருகேறும் அழகு தானே
அதை சொல்ல வார்த்தை உண்டோ!

வர்ணிக்கும் கவிதைகளில் கண்ட
வர்ணித்த பெண்மையை எங்கும்
போலொரு பெண்ணை நானும்
கண்டதில்லை பெண்மை இங்கே
என் கால் நடந்த பாதையிலும்
விழிபடர்ந்த பார்வையிலும்...

மிக மிக மென்மையானவள்
பெண்மை அது போற்ற வேண்டும்
தனிமையில் கணும் இனிமை அது
இனிமையில் காணும் தனிமை அது
சுவாசிக்கும் மனதில் காதல் வந்தால்
வாசிக்கும் வார்த்தைகள் கவிதையாகும்...!

மனதில் தோன்றிய மங்கையைப்
போற்றி வர்ணித்தவர்களே கவிஞர்கள்
ஆனால்,
மனதில் தோன்றா மங்கையவள்
இன்று காணும் நாகரீக
நங்கை எனும் பொம்மையவள்..,

அரசன் ஆண்ட காலத்தே
வணங்கி போற்றல் பெண்மை அது
வர்ணிக்க பெற்றது பெண்மை அங்கே.....

"அச்சம் மடம் நாணம் நளினம் பயிர்ப்பு"
நங்கையவள் கொண்டிருக்க
நடமாடும் தெய்வமெனும்
பெண்மை வாழ்ந்த காலம் எங்கே?

அனைத்துமே அழிந்துபோன தோற்றமில்லா
பெண்கள் இங்கே
மறைத்து வைக்க வேண்டியதை
மறந்துபோன வேதனைதான் ....

நாகரீகம் கொண்டதனால் நங்கையது,
நாகரீகம் நலிந்த பெண்மைதான் விந்தையிது...!

சுற்றி வரும் பெண்கள் இங்கே
மனதில் என்னவென்ற கற்பனையோ!
உச்சிமுதல் பாதம்வரை
பார்வை பட்டால் கூச்சமுண்டு
வியர்வை சொட்டும் ஆடையிலே
வித்தியாசம் என்ன உண்டு....,

ஏனிந்த மங்கை இவள்
அழகென்ற பொருள்மாறி
அழிவென்ற பாதையிலே தினம்
பயணிக்கும் பெண்களையே ஒருநாளும்
என்னால்,
வர்ணிக்க இயலவில்லை...
கவிஞனாய் கவி எழுத
என் பேனாவும் விரல் தொடுவதில்லை...,

எழுதியவர் : கலைவாணன் (20-Dec-16, 10:46 am)
Tanglish : naagareega penmai
பார்வை : 1043

மேலே