வெள்ளையா இல்லாத வெள்ளச்சி

ஏண்டி உனக்கு கயல்விழி -ன்னு பேரு வச்சாங்க?
@@@@
எனக்கு என்னடி தெரியும்? எனக்குப் பேரு வச்ச என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான் தெரியும்.
@@@@@
சரி.விழி-ன்னாகண். கயல்-ன்னா என்னடி?
@@@@@
கயல்-ன்னா 'மீன்'.
@@@@@
உன்னோட கண்ணு மீனோட கண்ணு மாதிரி வட்டமாவும் இல்ல மீன் வடிவத்திலும் இல்ல. அப்பறம் எதுக்கடி உனக்கு இந்தப் பேர வச்சாங்க.
@@@@@
உம் பேருக்கு என்னடி அர்த்தம்?
@@@@@
ஸ்வேதா. ஸ்வேதா - ன்னா 'பால் போன்ற வெண்மை' (as pure as milk) -ன்னு அர்த்தம்டி. இந்தப் பேருதாண்டி
இப்ப தமிழ் நாட்டில பிரபலம். ஒரு தெருவுக்கு ஒரு ஸ்வேதா இருக்கறாடி.
@@@@@
சரி உனக்கு ஏன் ஸ்வேதா-ன்னு பேரு வச்சாங்க?
@@@@!
அந்தப் பேரு உச்சரிக்க இனிமையா இருக்குன்னு எனக்கு வச்சாங்க.
@@@@@
அப்ப கயல்விழி மட்டுங் கசக்குதாடி?
எம் பேர எங் கண்ணோட ஒப்பிட்டு கிண்டல் பண்ணினயே நீ என்ன பால் மாதிரி வெள்ள நிறத்திலயா இருக்கற?
போடி வெள்ளையா இல்லாத வெள்ளச்சி. நாந் தமிழச்சிடி அடுப்புக்கரி வெள்ளச்சி.

எழுதியவர் : மலர் (20-Dec-16, 10:00 pm)
பார்வை : 504

மேலே