தங்க ரெட்டி

அப்பா, அப்பா, உங்க பேர மாத்திக்குங்க அப்பா.
@@@@@
ஏண்டா கண்ணு எம் பேரு பங்காரு ரெட்டி. தெலுங்கல பங்காரு-ன்னா தங்கம் -ன்னுதாண்டா அர்த்தம்.
@@@@
இந்த அர்த்தம் எல்லாம் நம்ம மாநிலத்து மக்களுக்குத் தெரியாதுங்கப்பா. அதனால உங்க பேர தங்க ரெட்டி-ன்னு மாத்திக்குங்க அப்பா.
@@@@
அடே பொடிப்பயலே எம் பேர இப்ப மாத்தினா வருமான வரித்துறை நம்ம வீட்டுக்கு வந்து சோதனை செய்வாங்கடா.
@@@@
செஞ்சுட்டுப் போகட்டுமே நமக்கென்ன?
@@@@
ஏண்டா என்ன சிறைச்சாசாலைக்கு அனுப்பி வைக்க ஆசப்படறீயா?
@@@
என்னங்க அப்பா சொல்லறீங்க?
@@@@
டேய் வீட்டில மூணு பாதாள அறைங்க இருக்குது. ஒண்ணுல தங்கக் கட்டி காசா நெறச்சு வச்சிருக்கறேன்; இன்னோரு அறை நெறைய வெள்ளிப் பொருள்கள்; மூணாவது அறையிலே ஐநூறு கோடி புதிய 2000 ரூபாய் நோட்டை அந்த அறைக் கதவத் தொறக்கமுடியாத அளவுக்கு அடச்சு வச்சிருக்கறண்டா.
@@@@
அதெல்லாம் தெரிஞ்சுதாம்பா உங்க பேர தங்க ரெட்டி-ன்னு மாத்தச் சொன்னென்.
@@@@
வைரமணிக் கண்ணு இந்த பணத் தட்டுபாடு பிரச்சனை தீர்ற வரைக்கும் பொறுத்துக்கடாச் செல்லம். அப்பறம் நீ ஆசப்படற மாதிரியே நாந் தங்க ரெட்டி ஆகிடறேன்

எழுதியவர் : மலர் (20-Dec-16, 10:38 pm)
பார்வை : 332

மேலே