காதல் தண்டனை

பதுக்கி வைக்க
உன் காதலென்ன
கருப்பு பணமா

என் கவிதை வரி
சோதனையில்
சிக்கிக் கொள்ளுமா

பதுக்கி வைத்த
குற்றம் மறைக்க
லஞ்சம் தருவாயா
காதலை லஞ்சமென தருவாயா

இல்லை
பதுக்கி வைத்த
குற்றம் ஏற்று
தண்டனை பெறுவாயா
கல்யாணமெனும் இன்ப
தண்டனை பெறுவாயா

எழுதியவர் : ஜெகன் ரா தி (23-Dec-16, 9:22 am)
Tanglish : kaadhal thandanai
பார்வை : 190

மேலே