காதலை தேடி -33

காதலை(லே) தேடி - 33

உன்னை காணாமலே
என் பயணம் முடிந்துவிடுமாயின்
அன்றே என்
உடலில் இணைந்த
ஜீவன் மரித்து போகும்
என் காதல் சகியே.......

"சகி இந்த ட்ரிப் உனக்கு பிடிச்சிருக்கா?"

"என்ன இப்படி கேட்டுட்டீங்க, இந்த மூணு நாளும் என்னோட லைஃப்லயே மறக்க முடியாத நாட்கள், என்ன எந்த அளவுக்கு நீங்க நேசிக்கிறிங்கனு என்னால உணர முடிஞ்சதுங்க, இந்த நிமிஷம் நான் அவ்ளோ சந்தோஷமா இருக்கேன்...."

"எனக்கும் அது தான் சகி வேணும், நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்"

*******************

என் சகி இந்த நிமிஷம் கூட சந்தோஷமா இருக்கணும்னு தான் கடவுளை வேண்டிக்கிறேன், சகி உன்ன பார்க்க முடியலைனாலும் நீ சந்தோஷமா இருக்கேனு தெரிஞ்சாலே போதும் சகி, நான் மீதி இருக்க வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்து முடிச்சிருவேன்...

"சார், நாளைக்கு எங்க போகணும்னு சொன்னிங்கன்னா அதுக்கு தகுந்த மாதிரி ரெடி ஆகி வந்துருவேன்"

"இல்லப்பா,இதுக்கு மேல எங்கயும் போகற வேலை இல்ல, நான் நாளைக்கு மலேசியாவுக்கு கிளம்ப போறேன், நீ என்ன ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணிட்ட போதும்பா"

"சார், நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, நீங்க இன்னும் கொஞ்ச நாள் இங்கயே இருந்து தேடி பாத்தா மேடம் நிச்சயமா கிடைப்பாங்கனு என் மனசுக்கு தோணுது சார்"

"இல்லப்பா, அவ கிடைப்பான்னு எனக்கும் நம்பிக்கை இருக்கு, ஆனா திடிர்னு எனக்கு ஒரு உறுத்தல், இப்போ அவ எப்படிப்பட்ட வாழ்க்கைல இருக்கானு தெரியாம நான் அவ வாழ்க்கைல திரும்ப நுழையறது நியாயம் இல்ல, இதனால அவளோட புது வாழ்க்கைல எதாவது பிரச்சனை வந்தா, வேண்டாம்ப்பா நான் அவளை பாக்கணும்னு தான் வந்தேன், அவ வாழ்க்கையை கெடுக்க இல்ல, நான் திரும்ப போறது தான் சரியா இருக்கும்...."

"சார், எனக்கு என்னவோ மேடம் உங்களை மறந்துட்டு புது வாழ்க்கையை தேர்ந்தெடுத்துருப்பாங்கனு என் மனசுக்கு படல, உங்க காதல் அவங்கள நிச்சயமா அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க விடாது, நீங்க….."

"போதும், இதுக்கு மேல இத பத்தி பேச வேண்டாம், நான் நாளைக்கு கிளம்பறேன், இது தான் என் முடிவு"

"மன்னிச்சிடுங்க சார், உங்க தனிப்பட்ட வாழ்க்கைல நான் தலயிட்டுருக்க கூடாது"

"நோ, நோ, அதெல்லாம் இல்லப்பா, நான் இங்க இருக்க ஒவ்வொரு நிமிஷமும் என் சகியோட வாழ்க்கைல சங்கடம் வர நானே காரணமாயிடுவேனோனு எனக்குள்ள ஒரு பயம் இருக்கு, அதனால தான் நான் உடனே கிளம்பனும்னு நினைக்கிறேன், உன் மனச கஷ்டப்படத்தற மாதிரி நான் பேசிருந் தா என்ன மன்னிச்சிடுப்பா"

"சார் உங்க நல்ல மனச பத்தி எனக்கு தெரியும் சார், உங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்னு தான் என் பிரார்த்தனை, அதெல்லாம் போகட்டும் சார், எனக்கொரு ஆசை இருக்கு, அத கேட்கலாமா?"

"ஆசையா, என்கிட்டே எதுக்கு தயக்கம், கேளுப்பா"

"நீங்க என் வீட்டுக்கு வரணும் சார், எங்க வீட்ல நீங்க பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான நபர் இருக்காங்க, அவங்க முகத்தை மட்டும் பாத்தா உங்களோட எல்லா பிரச்சனைகளும் உங்களை விட்டு ஓடியே போய்டும்"
"என்ன சார் புரியலையா, அது எங்க அம்மா தான், எங்க அம்மா ரொம்ப நல்லவங்க, அவங்கள மட்டும் பாத்தா போதும், யாரா இருந்தாலும் அவங்களோட மனசு ரொம்ப லேசா ஆகிடும், அவங்க முகத்துல அவ்ளோ அன்பும் கனிவும் இருக்கும், நீங்க எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாவை பாத்தா அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை குடுக்கும் சார், நீங்க கண்டிப்பா வரணும், வருவீங்களா சார்?"
"என்ன கேள்வி இது, இந்த நாற்பது நாளும் நீ என்னை சொந்த உறவா கவனிச்சிக்கிட்ட, உனக்காக உங்க வீட்டுக்கு கூட வர மாட்டேனா, இந்த ஊர்ல நான் இருக்கப்போற கடைசி நாள்ல கடைசியா நான் பார்க்க போற இடம் உங்க வீடா தான் இருக்கும், நாளைக்கு மார்னிங் வந்து என்ன பிக் அப் பண்ணிக்கோ"
"கண்டிப்பா சார், எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, இந்த விஷயத்தை நான் என் அம்மாகிட்ட சொல்லணும், அவங்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க, சார் நான் உடனே கிளம்பறேன் சார், நாளைக்கு காலைல வந்து உங்களை பிக் அப் பண்ணிக்கிறேன், பை சார்"
“ஹே, பாத்து மெதுவா போப்பா”
என்ன மாதிரியான மனிதன் இவன், இத்தனை நாளும் எத்தனை அனுசரணையா எனக்கு உதவி செய்தான், எனக்கொரு மகன் இருந்தா இவனை போல தான் இருப்பானோன்னு தோணும் அளவுக்கு எத்தனை அன்பு, அதே நேரத்துல என் தனிப்பட்ட வாழ்க்கைல மூக்கு நுழைக்கமா தள்ளி நின்னு கண்ணியமா நடந்துக்கிட்டது, எத்தனையோ நல்லவங்களோட நான் பழகி இருந்தாலும் இவனோடு பழகியது என்னவோ வித்தியாசமான அனுபவம் தான்...இவன் உருவில் சகியை பார்த்தது போல ஒரு உணர்வு தோன்றுமளவுக்கு என் மனசு இவனோடு உறவாட என்ன காரணம்....

இறைவன் ஒருவன் மேலே இருந்து ஆட்டுவிக்கும் போது காரண காரியம் அறியாமலே ஆட துவங்குவது தான் மனிதன் வேலை..இதில் ஆராய்ந்து என்ன கண்டுபிடிக்க முடியும்....

இவனை போலவே இவனது தாயும் நிச்சயம் நல்ல உள்ளம் படைத்தவராக தான் இருக்க வேண்டும், எப்படியோ நாளை அவர்களை சந்திப்பது என் வாழ்வின் முக்கிய நிகழ்வாக இருக்குமென தான் தோணுது.....

எழுதியவர் : இந்திராணி (24-Dec-16, 11:47 am)
பார்வை : 415

மேலே